world

img

ஜெர்மனியில் பணவீக்கம் புதிய உச்சம்

ஜெர்மனியில் பணவீக்கம் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.

மே மாதத்திற்கான புள்ளிவிபரங்களின்படி, ஜெர்மனியில் பணவீக்கம் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. 7.5 விழுக்காடு உயர்வானது பெரும்பாலும் அத்தயாவசியப் பொருட்களின் விலையுயர்வால் ஏற்பட்டிருக்கிறது.

ஜெர்மனியின் அதிகாரபூர்வ புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் நெருக்கடியால் பெரும் பாதிப்புகள் எற்பட்டுள்ளன. குறிப்பாக, எரிபொருட்களின் விலைகள் கடுமையான உயர்ந்திருக்கின்றன. 1973 மற்றும் 74 ஆம் ஆண்டுகளில் பெரும் அளவிலான எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டது. அதுபோன்றதொரு சூழலை ஜெர்மனி தற்போது சந்தித்து வருகிறது. எரிபொருட்களின் விலையுயர்வால் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் எகிறச் செய்துள்ளது.

பெருந்தொற்று காலத்தில் இருந்தே இந்த உயர்வு இருந்தாலும், ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் மக்களின் வாழ்நிலையைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளன.