world

img

சிபிசி 20 ஆவது மாநாடு நிறைவடைந்தது பொதுச்செயலாளர் அறிவிப்பு இன்று

பெய்ஜிங், அக்.22- சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மாநாடு அக்டோபர் 22 சனிக்கிழமை நிறைவ டைந்தது, கடந்த ஐந்தாண்டுகளின் பணி களை மதிப்பீடு செய்து புதிய சவால்களை  எதிர்கொள்ள கட்சியையும் அரசாங்கத்தை யும் தயார்படுத்தியது இம்மாநாடு. மார்க்சிய சித்தாந்த தளத்தில் இருந்து சீனப் பண்புக ளைக் கொண்ட நவீன சோசலிச நாட்டை நனவாக்கும் நோக்கில் விவாதங்கள் காங்கிரசில் நடந்தன. பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங் வழங்கிய வேலை அறிக்கை மற்றும் மத்திய ஒழுங்கு ஆய்வு ஆணை யத்தின் பணி அறிக்கை குறித்து பிரதிநிதி கள் விவாதித்தனர். கட்சி அரசியலமைப்பு திருத்தங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் புதிய மத்திய குழு மற்றும் மத்திய ஒழுங்குமுறை ஆணையம் சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டன. பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங் தலைமை யில் வெள்ளியன்று பிரீசிடியத்தின் மூன்றா வது கூட்டம் நடைபெற்றது. வாக்களிப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் மத்திய ஒழுங்கு முறை ஆணைய உறுப்பினர்களின் வரைவு பட்டியலுக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டது. தற்போதைய மத்திய குழுவில் 205 முழுநேர உறுப்பினர்கள் மற்றும் 171 மாற்று உறுப்பினர்கள் உட்பட 376 உறுப்பினர்கள் உள்ளனர். மத்தியக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து காங்கிரஸ் முடிவு செய்யும். புதிய மத்திய குழு ஞாயிற்றுக்கிழமை கூடி 25 பேர் கொண்ட அரசியல் தலைமைக் குழுவையும் (பொலிட்பீரோ), 7 பேர் கொண்ட நிலைக்குழுவையும் தேர்ந்தெடுக்கும். நிலைக்குழு ஞாயிற்றுக்கிழமை கூடி புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்யும். ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படலாம் என அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.