world

img

சிலி நாட்டில் இடதுசாரிகள் வெற்றி- மீண்டும் சிவக்க ஆரம்பிக்கிறது லத்தீன் அமெரிக்கா

சிலி நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வலதுசாரி வேட்பாளரான ஜோஸ் அண்டோனியோவை வீழ்த்தி 35 வயது இடதுசாரி இளைஞர் காப்ரியல் போரிக் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் சிலியின் இளம் ஜனாதிபதி என்ற பெருமையைப் பெறுகிறார் போரிக்.

சிலி நாட்டில் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் ஆட்சியில் இருக்கும் பழமைவாத வலதுசாரி ஜோஸ் அண்டோனியா காஸ்ட் மற்றும் இடதுசாரி கட்சியின் வேட்பாளரான மாணவர் சங்க தலைவருமான கேப்ரியல் போரிக் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில், இறுதியாக வெளியான தேர்தல் முடிவில் இடதுசாரி வேட்பாளர் காபிரியேல் போரிக் 55.87 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட அமெரிக்க ஆதரவு வலதுசாரி வேட்பாளர் ஜோஸ் அண்டோனியா 44.14%வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதனையடுத்து, 35 வயதான இடதுசாரி இளைஞர் காப்ரியல் போரிக் சிலி நாட்டின் அதிபராக பதவியேற்க இருக்கிறார்.

கியூபா, அர்ஜென்டினா, பொலிவியா, கொலம்பியா, பெரு, ஹோண்டுரஸ், நிகரகுவா, மெக்ஸிகோ, சிலி என்று நீளும் இடதுசாரி அரசாங்கங்கள் மற்றும் இடது ஆதரவு அரசுகளின் மூலம் மீண்டும் சிவக்க ஆரம்பிக்கிறது லத்தீன் அமெரிக்கா.

 

 

;