world

img

சிலி: லாரியும் மினி பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் உயிரிழப்பு  

சிலியில் லாரியும், மினி பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.  

மத்திய சிலியில் ஓஹிகின்ஸ் பிராந்தியத்தில் நேற்று மினி பேருந்து ஒன்று வேளாண் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு, மேற்குப்பகுதி நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிரே வந்த லாரி மீது மினி பேருந்து வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மினி பேருந்து ஓட்டுநர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

அதனைதொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.