கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்ததில் பெண் உள்பட 4 அதிகாரிகள் உயிரிழந்தனர்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ராணுவத்திற்கு சொந்தமான யுஎச்1என் ரக ஹெலிகாப்டர், குயிப்டோ என்ற பகுதியிலிருந்து ஆல்டோ நகருக்கு சென்றுகொண்டு இருந்தபோது நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 4 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹெலிகாப்டர் நடுவானிலிருந்து கீழே விழுந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.