world

ஐரோப்பா : ஆறு மாதங்களில் ஏழு லட்சம் பேர் பலியாகலாம்

கோபன்ஹேகன், நவ.24-  கொரோனா பாதிப்பால் ஐரோப்பியப் பகுதியில் உள்ள 53 நாடுகளில் ஏழு லட்சம் பேர் வரை யில் உயிரிழக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதாரக்கழகத்தின் ஐரோப் பியப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள் ளது. ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளில் மீண்டும் கோவிட்19 பாதிப்பு அதிகரித்துள்ளது. தடுப்பூசி கள் மூலமாகக் கிடைத்து வந்த பாது காப்பு குறைகிறது. இதற்கான சான்றுகள் உள்ளன என்று கோபன் ஹேகனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் உலக சுகாதா ரக் கழகத்தின் ஐரோப்பியப் பிரிவு கூறியுள்ளது. “பூஸ்டர்” ஊசி போட்டுக் கொள்வதற்கு பரிந்துரை செய்கிறார்கள். குறிப்பாக, ஏழை மக்களுக்கு இது அவசியம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மூன்று அம்சங்களைத் தொடர்ந்து உலக சுகாதாரக் கழகம் பரிந்துரை செய்து வருகிறது. தடுப் பூசி, தூய்மை மற்றும் சமூக இடை வெளி ஆகியவை தொடர்ந்து கடைப் பிடிக்கப்பட வேண்டும் என்று வலி யுறுத்தும் உலக சுகாதாரக் கழகம்,  ஐரோப்பாவிலும், மத்திய ஆசியாவி லும் நிலைமை படுமோசமாக இருப்ப தாகக் கூறுகிறது.  இது குறித்துக் கருத்துத் தெரி வித்துள்ள இயக்குநர்களில் ஒருவ ரான மருத்துவர் ஹான்ஸ் கிளஜ், “ஒரு கடினமான குளிர்காலத்தை நாம்  எதிர்நோக்கியிருக்கிறோம். ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் நிலைமை படுமோசமாக இருக்கிறது. ஆனால் நாம் நம்பிக் கையுடன் இருக்கலாம். அனைத்து அரசாங்கங்கள், சுகாதாரத்துறை மற்றும் தனிநபர்கள் தீர்மானகரமான முடிவுகளை எடுப்பதன் மூலம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரலாம்” என்கிறார். மொத்த இழப்பு வரும் மார்ச் 1 ஆம் தேதியன்று 20 லட்சத்தைத் தொடப் போகிறது. கடந்த வாரத்தில் மட்டும் ஐரோப்பிய மற்றும் அதையொட்டி யுள்ள மத்திய ஆசியப் பகுதிகளில் 4 ஆயிரத்து 200 பேர் கொரோனா வுக்குப் பலியாகியிருக்கிறார்கள். செப்டம்பர் மாதத்தை விட உயிரி ழப்பு இரண்டு மடங்கு அதிகரித்தி ருக்கிறது. இன்னும் ஆறு மாதங்க ளுக்கு இது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான் ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதைக் கார ணம் காட்டி முழு அடைப்புக்கான அறிவிப்பைச் செய்துள்ளன.