பெரும் அளவில் அதிகரித்து வரும் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற கோரிக்கைப் பேரணி நடைபெற்றது. “எல்லாம் மேலே போகிறது, எங்கள் சம்பளத்தைத் தவிர” என்ற முழக்கத்துடன் அவர்கள் வலம் வந்தனர்.