world

img

பெருங்கடல்களை காப்பாற்ற ஐ.நா பொதுச்செயலாளர் அழைப்பு

சர்வதேச சமூகம்  பெருங்கடல்களைக் காப்பாற்ற அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்  என ஐ.நா. அவையின்  பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் ஜூன் 8 உலக பெருங்கடல் தினத்தன்று அழைப்பு விடுத்துள்ளார். கடல் பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும்  பாதுகாப்பதோடு அவற்றின் வாழ்க்கையையும் மேம்படுத்துகிறது. அத்தகைய நமது கடல் தற்போது சிக்கலில் உள்ளது. இதற்கு நம்மை நாமே  குற்றம் சாட்ட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். 

கடல்களை பாதுகாக்கவில்லை என்றால் வளர்ந்து வரும் சிறிய தீவு நாடுகள் மற்றும்  கடற்கரையோரம் வாழும் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும். மேலும் நம் அனை வரையும் பாதித்து வருகிற  தீவிர காலநிலை மாற்றத்தை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள் ளார்.

கடல் பகுதிகளில் உள்ள  இயற்கை எரி வாயு, எண்ணெய் வளங்கள் ஆகியவற்றை கொள்ளை யடிக்க பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு கடலில் ஆதிக்கம் செலுத்தி பரப்பி வருகின்றன.   

இதனால் பவளப்பாறைகள் அழிக்கப்பட்டு கடல் பகுதிகள் அமிலமயமாகின்றன. இது கடல்  நீரின் தன்மையை மாற்றி அதில் வாழும் சிறிய உயிரினங்களின் அழிவுக்கு காரணமாவதோடு ஒட்டு மொத்த கடல் வாழ் உயிரினங்களின் சமநிலையையும் அழிக்கிறது.

இந்நிலையில் பெருங்கடல்களை பாதுகாக்க வேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

;