world

img

முன்னாள் கடற்படை அதிகாரிகளுடன் இந்திய தூதர் சந்திப்பு

தோகா,டிச.8- கத்தார் சிறையில் உள்ள முன்னாள் இந்திய  கடற்படை அதி காரிகளை இந்திய தூதர் சந்தித் துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கத்தாரில் உள்ள அல் தக்ரா குளோபல் நிறுவனத்தில் பணி யாற்றி வந்த 8 இந்திய முன்னாள் கடற்படை  அதிகாரிகளுக்கு   உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்து கத்தார் நீதிமன்றம் தூக்கு தண் டனை வழங்கியது.இந்த  தண்ட னைக்கு எதிரான மேல்முறையீட்டு க்கு பின் தூக்குத் தண்டனை   நிறுத்தப்பட்டுள்ளது. குற்றச் சாட்டு  தொடர்பாக கத்தார் அரசு மற்றும் ஒன்றிய அரசு அந்த வெளிப்படையான தகவல்களை யும் தரவில்லை. 

இந்நிலையில் அவர்கள் 8 பேரையும் இந்திய தூதர் சந்தித்துள் ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பாலஸ்தீனம் மீதான வெளியுறவு கொள்கை,கனடா நாட்டில் நிஜார் கொலை மற்றும் கத்தாரில் இந்திய முன்னாள் அதி காரிகளுக்கு தூக்கு தண்டனை என தொடர்ந்து வெளியுறவு கொள் கைகள் மற்றும் செயல்பாடுகள் மோசமடைந்துள்ளதாக விமர்ச னங்கள் எழுந்து வருகிறது.