world

img

பொய் வழக்கில் சிலியில் கம்யூனிஸ்ட் மேயர் கைது

ரெக்கோலடா, ஜூன் 10-  தென் அமெரிக்க நாடான சிலியில் ரெக்கோ லடா என்ற நகரத்தின் மேயர் டேனியல் ஜாடுவின் பதவிக்காலம் இன்னும் நான்கு மாதங்களில் முடிவடையும் நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

2021 ஆம் ஆண்டு  பெஸ்ட் குவாலிட்டி என்ற மருந்து நிறுவனத்திடம் இருந்து சிலி மக்கள் மருந்தகங்களின் சங்கம் வாங்கிய மருந்துக ளுக்கு  பணம் கொடுக்கவில்லை எனவும் இதனால் பத்து லட்சம் டாலர் கடன் உள்ளது எனவும்  அந்த நிறுவனம்  சிலி மக்கள் மருந்த கங்களின் சங்கம் மீது வழக்கு தொடுத்துள்ளது.

மக்கள் மருந்தகங்களின் சங்கத்தின் தலை வராக உள்ள டேனியல் தனது மேயர் அதி காரத்தை பயன்படுத்தி சங்கத்தை விசாரிக்க அனுமதிக்கவில்லை என அரசு வழக்கறிஞர் நீதி மன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலை யில்  ஜூன் 3-இல் மேயரை கைது செய்து 120 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க சாண்டியாகோ நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஊழல், லஞ்சம்,வரி ஏய்ப்பு, நிர்வாகம் மற்றும் சிலி மக்கள் மருந்தகங்கள்  சங்கம் ஆகியவற்றை தவறாக வழி நடத்தினார் எனவும்  அவர்  மீது ஆளும் தரப்பு வரிசையாக குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் எனது சட்டைப் பையில் ஒரு பெசோ கூட இல்லை. இது முற்றிலும் புனையப்பட்ட வழக்கு. இதனை  நாங்கள் சட்ட ரீதியாக  எதிர்கொள்வோம் என  மேயர் டேனியல் ஜாடு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிலி கம்யூனிஸ்ட் கட்சி  ஜூன் 3 அன்று வெளியிட்ட அறிக்கையில், ரெக்கோ லடா நகர நிர்வாகம் நகர மக்களாலும் ,தேச, சர்வ தேச ரீதியிலும் அங்கீகாரம் பெற்றுள்ளது. நகர நிர்வாகத்தில் பெரும்பகுதி மக்கள் ஈடுபடுத்தப் படுகின்றனர். திறந்தவெளி பல்கலைக்கழகம், மக்கள் நூலகங்கள் ,புத்தகக்  கண்காட்சிகள் போன்ற திட்டங்களுக்கு நகர நிர்வாகம் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. மேயர் குற்றவாளி என நிரூபணம் ஆகும் வரை அவர் நிரபராதியே.  மேயர் மீதான தடுப்பு காவல் காலம் பொருத்த மற்றது என கண்டித்துள்ளது.

;