world

img

தீக்கதிர் உலக செய்திகள்

சாம்சங் ஊழியர்களின்   வரலாற்று முடிவு 

சாம்சங் நிறுவன வரலாற்றில் முதன் முறையாக தொழிற்சங்கத்தில் உறுப்பி னர்களாக உள்ள  28,000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யவுள்ளனர். முறையான சம்பளம், விடுமுறை, போனஸ் ஆகியவை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறுவனம் நிறை வேற்றாததால் ஜூன் 7 அன்று  வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். தென் கொரியாவின் மிகப்பெரிய இந்நிறுவனம் 2019 வரை தொழிற்சங்கங்களை தடுத்தது குறிப்பிடத்தக்கது.

காசாவில் 15 ஆயிரம்  குழந்தைகள் படுகொலை

காசாவில் இதுவரை 15 ஆயிரத்துக்கும்  அதிகமான குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2023 அக்டோபர் மாதம் போர் துவங்கியதில் இருந்து காசா பகுதியில் பள்ளி செல்லும் வயதுடைய 15 ஆயிரம் குழந்தைகளை இஸ்ரேல் ராணுவம் கொலை செய்துள்ளதாக பாலஸ்தீன கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் குறிப்பி ட்டுள்ளது.  மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில்  64 குழந்தைகள் கொலை செய்யப் பட்டுள்ளனர். 

நாங்களும் போருக்குத் தயார்:  ஹிஸ்புல்லா எச்சரிக்கை 

ஹிஸ்புல்லா ஒரு விரிவான போருக்குத் தயாராக இருப்பதாக அறி வித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் ஷேக் நைம் காசிம் “இஸ்ரேல் ஒரு விரிவான போரை நடத்த விரும்பினால், அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று எச்சரிக்கை விடுத்துள் ளார். மேலும் லெபனான் மீதான எந்தவொரு போர் விரிவாக்கமும் இஸ்ரேலுக்கு பேரழிவை கொடுக்கும் என எச்சரித்துள்ளார்.

ராணுவ ஆலோசகர்களை  அனுப்புகிறதா அமெரிக்கா?

உக்ரைனுக்கு ராணுவ ஆலோசகர்களை அமெரிக்கா அனுப்புவதாக தகவல் வெளியான நிலையில் அதனை அமெரிக்கா மறுத்துள்ளது. உக்ரைன்  தலைநகரில் அந்நாட்டு ராணுவம் போர் பயிற்சியில் ஈடு பட்டுள்ளது. இந்நிலையில்  அமெரிக்கா ராணுவ  ஆலோசகர்களை அனுப்பி உதவப் போவதாக செய்தி வெளியானது. அதற்கு அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் மறுப்பு தெரிவித்துள்ளார். 

இலங்கையில் வெள்ளம் : பலி எண்ணிக்கை உயர்வு

இலங்கையில் பெய்து வரும் கன மழை யால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மே 15 முதல் இலங்கையில் பெரும் மழைப்பொழிவு  இருந்து வருகிறது. இதில் 71 வீடுகள் முற்றிலு மாக இடிந்து போயுள்ளன. 9,300 வீடு களும், 825 சிறு குறு நிறுவனங்களும் சேதம டைந்துள்ளன. தலைநகர் கொழும்பு  உட்பட 10 மாவட்டங்களில் 300 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

;