world

img

விமானத்தில் 35 000 அடி உயரத்தில் பிறந்த குழந்தை  மிராக்கிள் ஆயிஷா - மருத்துவர் நெகிழ்ச்சி 

 

 

நைல் நதிக்கு மேல் 35 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது நடுவானில் பிரசவம் பார்த்த அனுபவத்தை  மருத்துவர் ஆயிஷா நெகிழ்ந்து பதிவிட்டிருக்கிறார். 

கத்தாரிலிருந்து  உகாண்டாவிற்கு காத்தார் ஏர்வேஸ் விமானம் நைல் நதிக்கு மேல் 35 அடி உயரத்தில் பறந்து சென்று கொண்டிருந்தது. அப்போது இங்கு யாராவது மருத்துவர்கள் இருக்கிறீர்களா என்று இண்டர் காம் மூலம் விமானப் பணிப்பெண்கள் கேட்டனர். உடனே  அந்த விமானத்தில் டொரான்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் மருத்துவர் ஆயிஷா கதீப் கையை உயர்த்தி நான் இருக்கிறேன் எனத் தெரிவித்திருக்கிறார். மேலும் விமானத்தில் பயணிக்கும் யாரோ ஒருவருக்குப் பிரச்சனை போலும் என்று எண்ணி எழுந்து சென்று போய் பார்த்திருக்கிறார். 

அப்போது ஒரு பெண்ணை சுற்றி கூட்டமாகப் பலரும்  நின்று கொண்டு இருந்திருக்கின்றனர். அந்த பெண்ணிற்கு மாரடைப்பு போன்ற பிரச்சனை இருக்குமோ என்று நபர்களை விலக்கி விட்டு அருகில் சென்று பார்த்த போது,  அந்த பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருப்பதையும், குழந்தை வெளியே வந்து கொண்டிருப்பதையும் கவனித்திருக்கிறார். அப்போது விமானத்திலிருந்த இரு மருத்துவ ஊழியர்களையும் உதவிக்கு வைத்துக் கொண்டு அந்த பெண்ணிற்கு மருத்துவர் ஆயிஷா பிரசவம் பார்த்திருக்கிறார்.