ஈரானில் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே மிக மோசமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகில் அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரை சுட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. அவர் ஈரானின் அணு ஆயுத உருவாக்கத்தின் பின்னணியில் முக்கியமான நபராக இருந்துள்ளதாக மேற்கத்திய புலனாய்வு அமைப்புகள் கூறியுள்ளனர். ஈரானின் அணு குண்டின் தந்தை என்றும் வர்ணித்துள்ளார்.
மொஹ்சென் பக்ரிசாதே தலைவர் தெஹ்ரான் அருகே காரில் சென்றுள்ளார். அங்கு குண்டு வெடிப்பிற்கு திட்டமிட்டிருந்துள்ளனர். இந்த நிலையில், துப்பாக்கிகளை ஏந்திய நிலையில் 5 பேர் காரை வழிமறித்து சுட்டுள்ளனர். இதனால், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். ஏற்கனவே, ஈரான் உற்பத்தி செய்யும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவு அதிகரித்திருப்பது குறித்த கவலையில் இருக்கும்போது, இந்த படுகொலை மேலும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பக்ரிசாதேவின் பாதுகாவலரும் படுகாயம் அடைந்துள்ளார். கடந்த 2010 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் 4 ஈரானிய அணு விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைக்கு இஸ்ரேல் உதவியாக இருந்ததாக புகார் எழுந்தது. தற்போது மீண்டும் கொலை நடந்துள்ள நிலையில், இஸ்ரேல் நாட்டின் பயங்கரவாதம் தான் இதற்கு காரணம் என, ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.