டெக்ஹரான், மே 20 - ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராகிம் ரைசி (63) ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதை அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அந்நாட் டின் முதல் துணைப்பிரதமராக பணியாற்றி வரும் முகமது முக்பர் இடைக்கால ஜனாதிபதியாக செயல்படுவார் என்றும் ஈரான் சட்ட விதிகளுக்குட்பட்டு 50 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப் படுவார் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
துணை வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றிவரும் அலி பகேரி இடைக்கால வெளி யுறவுத்துறை அமைச்சராக பணியாற்றுவார் என தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் 5 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பதாக அந்நாட் டின் உயர் மதத் தலைவர் அயத் துல்லா அலி கொமேனி தெரிவித் துள்ளார்.
ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி, மே 19 அன்று மாலை அஜர் பைஜான் நாட்டில் இருநாட்டு ஒத்து ழைப்புடன் அரஸ் நதியில் கட்டப் பட்ட மூன்றாவது அணையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றார். அந்நிகழ்வு முடிந்து திரும்பும் வழியில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் மிக மோசமான வானிலை காரண மாக கிழக்கு அஜர் பைஜான் மலைப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் வெளியானவுடன் மத்தியகிழக்கு நாடுகள் உட்பட உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. முதலில் அந்நாட்டு அரசு ஊடகங்கள் இப்ரா கிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் காணவில்லை என்று கூறிய நிலை யில், சிறிது நேரத்திலேயே விபத்து நடந்ததை உறுதி செய்தன. அதே நேரத்தில் ஜனாதிபதி பாதுகாப்பிற் காக உடன் பயணித்த இரு ஹெலி காப்டர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
நீண்ட நேர தேடுதல் வேட்டை
அதிக பனிமூட்டம் மற்றும் மோச மான வானிலை காரணமாக மீட்பு படையினரால் உடனடியாக விபத்து நடந்த இடத்தை சென்றடைய முடிய வில்லை. இதனால் தேடுதல் வேட்டை மே 19 இரவு முழுவதும் நடந்தது. இந்நிலையில் சர்வதேச நாடுகள் ஈரானின் தேடுதல் பணிக்கு உதவ முன்வந்தன. எனினும் தேடுதல் வேட்டை காலை வரை நீடித்தது.
அப்போதே விபத்து நடந்த இடத்தில் யாரும் உயிருடன் இருப்ப தற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என ஈரானிய ஊடகங்கள் தெரி வித்தன. அதன் பிறகு ஈரான் பிரதமர் இப்ராஹிம் ரைசி , அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹி யன், கிழக்கு அஜர்பைஜான் கவர்னர் மாலேக் ரஹ்மதி, கிழக்கு அஜர்பைஜான் இமாம் முகமது அலி அலே-ஹஷேம் உள்ளிட்ட 8 முக்கிய நபர்கள் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டது. அவர் களின் உடல்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டு அந்நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டன.
அமெரிக்காவின்சிம்ம சொப்பனம்
மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டுடன் செயல்படும் நாடாக ஈரான் இருந்து வருகிறது. இதனால் ஈரானின் மீது பல பொருளாதார தடைகளை அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் விதித்துள்ளன.
மேலும் அமெரிக்காவின் ஏகாதி பத்திய அரசியலை எதிர்ப்பதற் காக ரஷ்யா மற்றும் சீனாவுடன் நெருங்கிய நட்புறவை ஈரான் அரசு கடைபிடித்து வருகிறது. வள ரும் நாடுகளையும் தங்கள் கூட்ட ணியில் இணைத்து பொருளாதார ஒத்துழைப்பில் ஈடுபட்டு வரு கின்றது. இதனால் மத்தியக் கிழக்குப் பிரதேசத்தில் அமெரி க்காவிற்கு சிம்ம சொப்பனமாக ஈரான் இருந்து வருகிறது.
வெறுப்பை கக்கும் அமெரிக்க எம்.பி.,
அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ரிக் ஸ்காட் ஈரான் ஜனாதிபதியின் விபத்தை வரவேற்பதாகவும், அவர் யாராலும் நேசிக்கப்படவில்லை; மதிக்கப்படவில்லை என்றும் அவரை இழந்து யாரும் தவிக்கப் போவதில்லை என தனது எக்ஸ் பக்கத்தில் வெறுப்பை கொட்டியுள்ளார். இதற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இஸ்ரேல், அமெரிக்காவின் சதியா?
பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பிற்கு ஈரான் உதவுவதாக குற்றம் சாட்டி வந்தது. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் ஈரானின் முக்கிய ராணுவத் தளபதிகளை இஸ்ரேல் ராணு வம் படுகொலை செய்த நிலையில் இஸ்ரேல் மீது அதிரடி ஏவுகணைத் தாக்குதலை ஈரான் தொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சூழலில் இந்த விபத்தின் பின்னணியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உளவுத்துறையின் பங்கு இருக்கிறதா என்ற கேள்வி களும் எழுந்துள்ளன.
உலகத் தலைவர்கள் இரங்கல்
ஈரானின் உச்சபட்ச அதிகாரம் படைத்த தலைவரான அயத்துல்லா அலி கொமேனி தனது துயரங்களை தெரிவித்துள்ளார்.
தங்களின் உண்மையான நண்பனை இழந்துவிட்டோம் என ரஷ்யா ஜனாதிபதி புடின் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஈரானின் நட்பு நாடுகளான மலேசியா,இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் இராக், கத்தார், எகிப்து, சவூதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களும் பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியமும் ஈரானுக்கு தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளன.
லெபனானின் ஹிஸ்புல்லா எங்கள் சிறந்த சகோதரனை இழந்து விட்டோம் என தங்களது இரங்கலை ஈரான் மக்களுக்கு தெரிவித்துள்ளது. மேலும் ஏமனின் ஹவூதி அமைப்பு, ஹமாஸ் குழுவும் தங்களது வருத்தத் தை ஈரானுடன் பகிர்ந்துள்ளனர்.லெபனான், சிரியா ஆகிய நாடுகள் மூன்றுநாள் துக்கம் அனுசரிப்பதாக தெரிவித்துள்ளன.
இந்தியாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான செய்திகளால் ஆழ்ந்த கவலை கொண்டதாகவும் இந்த துயரமான நேரத்தில் ஈரான் மக்களுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்; ஜனாதிபதி இப்ராஹிம் மற்றும் அவரை சார்ந்தோ ருக்காக பிரார்த்தனை செய்கிறோம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் மே 21 அன்று இந்தியா முழுவதும் ஒரு நாள் துக்கத்தை அனு சரிப்பதாக இந்திய அரசு அறிவித்துள் ளது. இதனால் செவ்வாய்கிழமை அனைத்து அரசுக் கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.