டெஹ்ரான், டிச.5- மத வழக்கப்படி மக்கள் நடந்து கொள்கிறார்களா என்பதைக் கண்காணிப்ப தற்காக உருவாக்கப்பட்ட காவல்துறையைக் கலைக்க ஈரான் முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. செப்டம்பர் 16 ஆம் தேதியன்று 22 வயது நிரம்பிய மஹ்சா அமினி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உயிரிழந்தார். மத வழக்கப்படி அவரது உடை இல்லை என்ற காரணத் திற்காக காவல்துறை அவரைக் கைது செய்தி ருந்தது. காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் பின்னர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். அங்கு அவர் உயிரிழக்கிறார். அவரது மரணம் மத்தி யில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த இரண்டரை மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்தன.
இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியா ளர்களிடம் பேசிய அரசு வழக்கறிஞர் முகமது ஜாபர் மாண்டசேரி, “நாடாளு மன்றமும், நீதித்துறையும் இந்தப் பிரச்சனை குறித்து ஆலோசனை செய்து வருகின்றன. பெண்கள் தங்கள் தலைகளை மூடியவாறு உடை அணிய வேண்டியது கட்டாயமா என்ற கேள்வியை எழுப்பி விவாதித்து வருகிறார் கள்” என்று தெரிவித்திருந்தார். அத்தகைய விதிகளை மறுபரிசீலனை செய்வார்கள் என்பதற்கான அறிகுறிகள் அவரது பேட்டி யில் தெரிந்தன. இந்நிலையில்தான் கண்கா ணிப்புக் காவல்துறை கலைக்கப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
“வழிகாட்டும் ரோந்துப்படை” என்று இந்தக் கண்காணிப்புக் காவல்துறையின ருக்கு பெயர் சூட்டியிருந்தார்கள். மதவாதி யான மஹ்மூத் அஹ்மதினெஜத் ஜனாதிபதி யாகப் பொறுப்பேற்றபோது இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டது. பொது இடங்களில் இஸ்லாமிய உடைகளை அணிந்து செல்கி றார்களா என்பதை இவர்கள் கண்காணிப்பார் கள். அத்தகைய உடையை அணியவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் அவர்களுக்குத் தரப்பட்டிருந்தது. 2008 ஆம் ஆண்டில் இருந்து கண்காணிப்புக் குழு ரோந்து சுற்றி வந்துள்ளது. ஈரானின் சட்டப்படி, வயது வந்த பெண்கள் அனைவரும் தங்கள் தலையை மூடிக் கொண்டும், தளர்ந்த உடைகளைக் கொண்டு தங்கள் உடல்களை மறைத்தும் அணிய வேண்டும். இந்த சட்டத்தில் எந்த வயதில் இருந்து இந்த உடைக்கான கட்டுப்பாடுகள் என்று குறிப்பிடப்படாவிட்டாலும் பள்ளிக ளுக்குச் செல்லும் பெண் குழந்தைகள் ஏழு வயதில் இருந்தே தலைகளை மூடிக் கொள்ளும் ஹிஜாப் அணிய வேண்டும் என்பது கட்டாயமானதாக உள்ளது. பள்ளிக் கூடத்தில்தான் இந்தக் குழந்தைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் இந்த இளம் குழந்தைகள் ஹிஜாப் அணிய வேண்டும் என்பது கட்டாயமில்லை.
பெண்களே இலக்கு
இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி, ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவரும் சாதாரண உடைகளைத்தான் அணிய வேண்டும். ஈரான் போன்ற நாடுகளில் இது தீவிரமாக நடை முறைப்படுத்தப்படுகிறது. ஆனால், பெண்க ளுக்குதான் சட்டங்கள் பொருத்தப்படு கின்றன. ஆண்களைக் கைது செய்வதோ, உடைகள் குறித்து கட்டாயப்படுத்துவதோ இல்லை. ஆனால், ஹிஜாப் விவகாரம் ஈரான் மக்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு பெரும் வெற்றியைக் கொடுத்திருக்கிறது. காலம் உடை அணிவதிலும் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது என்று போராடிய ஈரான் பெண்கள் கூறியுள்ள னர். உடைகளைப் பொறுத்தவரை, மதவாதி களின் கட்டுப்பாடுகளை பல ஆண்டுகளுக்கு முன்பே ஈரானியப் பெண்கள் தாண்டி விட்டார் கள். 2018 ஆம் ஆண்டு எடுத்த ஒரு ஆய்வின் படி, கிட்டத்தட்ட 60 முதல் 70 விழுக்காடு வரை யிலான பெண்கள் மத ரீதியான கட்டுப்பாடு களை புறக்கணித்து விட்டார்கள் என்பது தெரிய வந்துள்ளது.