world

img

போர் நிறுத்த அறிவிப்பை மீறி அத்துமீறல் மேற்குக் கரை பகுதியை தாக்கி அழிக்கும் இஸ்ரேல்!

கிழக்கு ஜெருசலேம், நவ. 28 - இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டு இருந்தாலும், பாலஸ்தீனத்தில் தாங்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள மேற்குக் கரை பகுதி மீது தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நிறுத்தவில்லை. நான்கு நாள் போர் நிறுத்தத்தின் இறுதி நாளான திங்களன்று இரவு முதல் செவ்வாய்க்கிழமை அதி காலை வரை ரமல்லாவின் வடமேற்கே உள்ள காஃப்ர் ஈன் என்ற கிராமத்தில் ஒருவர், பெய்துனியா நகரில் மற்றொருவர் என இரண்டு பாலஸ்தீன இளை ஞர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொலை செய்துள்ளது. ஆகஸ்ட் மாதம் தங்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட தாவூத் அப்தெல் ரசாக் என்பவரது வீட்டை  வெடிகுண்டு வைத்தும் இஸ்ரேல் ராணுவம்  தகர்த்துள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனர்கள்  படுகாயமடைந்துள்ளனர்.  போர்நிறுத்தம் மேலும் 2 நாள் நீட்டிப்பு இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான நான்கு நாள்  போர்நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ள நிலையில், இந்த 2 நாட்களில் தலா 10  பணயக் கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் குழுவும்,  தங்கள் சிறையில் அடைத்து வைத்துள்ள 60 பாலஸ்தீனர்களை விடுவிப்பதாக இஸ்ரேல் தரப்பும்  கூறியிருப்பதாக கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். இந்த போர் நிறுத்த நீடிப்பிற்கு காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஐ.நா. பொதுச்செயலாளரும் இந்த போர்நிறுத்த நீட்டிப்பு மக்களுக்குத் தேவையான உதவிப் பொருட்களை விநியோகிக்க வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.