world

img

போரை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறது இஸ்ரேல்

இஸ்ரேல் ராணுவம் காசா மீதான போரை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் காசாவில் தினந் தோறும் பாதுகாப்பற்ற முறை யில் 166 குழந்தை பிறப்பதாக வும் கிட்டத்தட்ட 50,000 கர்ப்பிணிப் பெண்களின் உயிர் பாதுகாப்பற்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் துவங்கிய  பிறகு காசாவில் உள்ள பாலஸ்தீன மக்க ளுக்கான மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப்  பொருட்களை இஸ்ரேல் ராணுவம் இரண்டு வாரங்களாக முடக்கிய நிலை யில் தற்போது மிக குறைந்த அளவிலான நிவாரணப் பொ ருட்களை மட்டும் காசாவிற்குள் அனுமதித்து வருகிறது.

மருத்துவப் பேரிடர்

மருத்துவமனைகள் இயங்க தேவையான எரி பொருட்களை தற்போது வரை அனுமதிக்கவில்லை.இத னால் சனிக்கிழமை  வரை  7 மருத்துவமனைகள், 21 சுகா தார நிலையங்கள் முடங்கி இருந்த நிலையில் ஞாயிற்றுக்  கிழமையன்று ஒரே நாளில் 12 மருத்துவமனைகள்,  32 சுகாதார நிலையங்கள் முடங்கிவிட்டன. இதனால் குண்டுவீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காசா பகுதியில் உள்ள 50,000க் கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கும் முறையான மருத்துவ பாதுகாப்பு கொடுப்பதிலும் பெரும் பாதிப்பு ஏற் பட்டுள்ளது.ஏற்கனவே இஸ்ரேலின் தொடர் குண்டுவீச்சி னால் ஏற்படும் அதீத அதிர்வுகளில் பல பெண்களுக்கு கருச் சிதைவு ஏற்பட்டது. பல கர்ப்பிணிகள் கொல்லப்பட்டுள்ள னர்.இந்நிலையில் புதிய மருத்துவப்  பேரிடர் இஸ்ரேலால்  உருவாக்கப்பட்டு வருகிறது. காசா பகுதியில் ஞாயிற்றுக் கிழமை மட்டும் இஸ்ரேல் ராணுவம் 320 கட்டிடங்களின் மீது குண்டு வீசி  ஒரே இரவில் 182 குழந்தைகள் உட்பட 436 பாலஸ்தீனர்களை கொலை செய்துள்ளது.இதுவரை காசா வில் 1,81,000 வீடுகள்மீது குண்டு வீசப்பட்டுள்ளது எனவும் 2,055 குழந்தைகள் 1,119 பெண்கள் உட்பட 5,087 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.