ஜோகன்னஸ்பர்க், நவ. 23- தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்த மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் சதீஷ் துபேலியா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். ஒரு மாத காலமாக அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் ஞாயிறன்று மாலை உயிரிழந்ததாகவும் அவரது சகோதரி உமா துபேலியா கூறினார். ஜோகன்னஸ்பர்க்கில் காந்தியின் பெயரால் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை இவர்களது குடும்பம் கவனித்து வந்தது.