world

img

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் இன்று காலை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தோனேஷியாவில் மேற்கு பபுவா மாகாணம் உள்ளது. இங்குள்ள மத்திய மம்பெரமோ மாவட்டத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். இரண்டு நிலநடுக்கங்களும் 15 கிலோமீட்டர் (9.3 மைல்) ஆழத்தில் அபேபுரா நகரத்திலிருந்து 272 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டன.

இந்த நிலநடுக்கம் 6.2 மற்றும் 5.5 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக இந்தோனோஷிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்ட விவரம் எதுவும் தெரியவில்லை. 

கடந்த பிப்ரவரி மாதம் உணரப்பட்ட நிலநடுக்கத்தில் 25 பேர் இறந்தனர். இதேபோல் கடந்த ஆண்டு மேற்கு சுலாவேசி மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 100 பேர் பலியானார்கள். 6,500 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;