world

img

பிலிப்பைன்ஸில் சூறாவளியுடன் கனமழை : 200-க்கும் மேற்பட்டோர் பலி.

மணிலா 
தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் ராய் சூறாவளி காற்று கனமழையுடன் நாட்டை ஒரு புரட்டு புரட்டி வருகிறது.

வியாழனன்று உருவான இந்த சூறாவளி புயல் 4 தினங்களாக மிரட்டி வருகிறது. இந்த சூறாவளிக்கு இதுவரை 208 பேர் பலியாகியுள்ளார். 239 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 52 பேரை காணவில்லை. 3 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமாகியிருப்பதாகவும் பலர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

;