ஜகர்த்தா
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தலைநகர் ஜகர்த்தாவில் இருந்து கிழக்கு பகுதி நோக்கி இருக்கும் முக்கிய தீவான பிளோரஸ் தீவு பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த தீவு பகுதியில் மழைவெள்ளத்தால் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 44 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் 41 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 3 பேர் நிலை என்னவென்று தெரியவில்லை.
நிலச்சரிவு ஏற்பட்ட பிளோரஸ் தீவு பகுதியில் கத்தோலிக் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழுகின்றனர். ஈஸ்டர் தினமான இன்று நிலச்சரிவு சம்பவம் நடந்ததால் அப்பகுதி பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.