world

img

நிற்கதியாய் நிற்கும் ஆப்கன் மக்கள்!

20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடாக இருந்தது. 2021 ஆகஸ்ட் 15 இல் தாலிபான்கள் ஆப்கனில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி னர். அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டன. ஆப்கனின் மத்திய வங்கி ‘டா ஆப்கானிஸ்தான்’ வங்கி. காபூலில் உள்ள இந்த பிரதான வங்கி தனது  வெளிநாட்டு இருப்பு நிதி 950 கோடி டாலரை நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்து இருந்தது. அமெரிக்கப் படைகள் வாபஸ் ஆனவுடன் இந்த நிதி 950 கோடி டாலரும் அமெரிக்காவால் முடக்கப்பட்டது. ஆப்கனின் மக்கள் தொகை 4 கோடி. அமெரிக்க ஆக்கிரமிப்பு காலம் 20 ஆண்டு முழுமையும் பொது சுகாதார அமைச்சகம் நன்கொடையாளர் மற்றும் வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியை சார்ந்து செயல்பட்டது. இந்த நிதி குழந்தை இறப்பையும் பிரசவ கால இறப்பையும் குறைக்க உதவியது. உலக வங்கியும் ஆப்கனுக்கு நிதி உதவி செய்பவர்களும் இணைந்து 2002இல் 150 கோடி டாலர் ஆப்கானிஸ்தான் மறுசீரமைப்பு டிரஸ்ட்  நிதி உருவாக்கப்பட்டது. தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த நிதியையும் உலக வங்கி முடக்கி யுள்ளது. இவற்றின் விளைவாக ஐ.எல்.ஓ மதிப்பீடு  படி 10 லட்சம் மக்கள் இந்த ஆண்டு மத்தியில் ஆப்க னில் வேலை இழப்பர்.

இதில் பெண்களே அதிக மாக வேலை இழப்பர். ஏனெனில் பெண்கள் பணிபுரிய தலிபான்கள் தடை விதிக்கின்றனர். ஐரோப்பிய யூனியன் 140 கோடி டாலர் ஆப்கனுக் கான உதவியை நிறுத்தியுள்ளது. 2021க்கும் 2025க்கும் இடையே இந்த உதவி நிதி ஆப்கனுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த உதவி நிறுத்தப் பட்டதால் 3 கோடி மக்கள் சார்ந்து இருந்த 2000 சுகா தார மையங்கள் மூடப்பட்டன. இந்த ஆண்டு மத்தியில் 97 சதவிகித ஆப்கன்  மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் நிலைக்கு தள்ளப்படுவர் என ஐநா சபை கூறுகிறது. ஆப்கனின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜி.டி.பி கடுமை யாக சரிந்துள்ளது. ஆப்கனுக்கும் பாகிஸ்தா னுக்கும் இடையேயான வணிகம் 25 சதவிகிதம் குறைந்துள்ளது. சந்தையில், கடைகளில் பொருள் கள் உள்ளன. ஆனால் இவற்றை வாங்கும் சக்தி  மக்களுக்கு இல்லை. ஆப்கன் அரசிடமும் பண மில்லை. புதிய நாணயத்தை உருவாக்க முடியாது.  ஏனெனில் அதற்கான பின்புல ஆதரவு வேண்டும் .  ஐ.நா குழந்தைகள் நிதியம் - யுனிசெப் அமைப்பு,  மிக மோசமான போசாக்கின்மையால் 10 லட்சம் ஆப்கன் குழந்தைகள் இறக்கக் கூடும் என்பதே. இளம் வயது சிறுமிகள் மூன்றில் ஒருவருக்கு அனீமியா, ரத்தசோகை, சிவப்பு உயிரணு குறைவு. உயரத்துக்கு தகுந்த எடை இல்லை .வயதுக்குத் தகுந்த உயரமில்லை. குழந்தைகள் 41 சதவிகிதம் பேரின் நிலைமை இதுதான்.