world

img

மொராக்கோவில் பயங்கர நிலநடுக்கம்: 1037 பேர் பலி

ரபாத், செப்.9- வட அமெரிக்க நாடான மொராக்கோவில் வெள்ளிக்கிழமை  உள்நாட்டு நேரப்படி  இரவு 11 மணிக்கு 6.8 ரிக்டர் அளவிலான   சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற் பட்டது. இதில், இதுவரை 1037 பேர்  பலியானதாக தெரிய வருகிறது. மொரோக்கோ நாட்டின் வர லாற்றிலேயே இது மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகும். சுற் றுலா நகரமான மாரகேஷின் வட கிழக்கில் சுமார் 72 கிமீ தூரத்தில்  18.5 கிமீ  ஆழத்தில்  பூகம்பம் உரு வாகியுள்ளது  என அமெரிக்க புவி யியல் ஆய்வு மையம் தெரிவித்துள்  ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்பதில் அந்நாட்டு மீட்  புப்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியேறிய மக்  கள் இரவு முழுவதும் தெருக்களில்  தஞ்சம் அடைந்தனர். கட்டிட இடி பாடுகளில் சிக்கி 1037 பேர்  பலி யாகியுள்ளனர் என அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் தெரி விக்கப்பட்டது.மேலும்  படுகாயம டைந்த மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள் ளனர்.

நூற்றுக்கணக்கானோர் ரத்ததானம் 

படுகாயமடைந்துள்ள மக்க ளின் எண்ணிக்கை தொடர்ந்து அதி கரிப்பதால் ரத்த வங்கிகளில் இருப்பு மிக வேகமாக தீர்ந்து வருகிறது எனவே இரத்த தானம் செய்ய முன்வருமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்த சில மணி நேரத்  தில் நூற்றுக்கணக்கான மக்கள் ரத்ததானம் செய்ய வந்தனர். நில நடுக்கம் ஏற்பட்ட பகுதி சுற்றுலா நகரம் என்பதால் தங்கள் நாட்டு மக்  கள் மரணம் அடைந்துள்ளனரா என்று அந்தந்த நாட்டுத் தூதரக அதி காரிகள்  தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நிலநடுக்கம் துவங்கிய சில நிமி டங்களில் மின்சாரமும் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது. தொலைபேசிகள் ஏதும் வேலை செய்யவில்லை. ஆயினும் சில மணி நேரத்தில் தொலைபேசியை மட்டும் பயன்படுத்த முடிந்தது என  பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித் துள்ளனர்.

தலைவர்கள் ஆறுதல் 

நிலநடுக்கச் செய்தி வெளிவந்த உடன் இந்திய பிரதமர் மோடி உட்  பட உலக நாடுகளின் தலைவர்கள் (ட்விட்டர்) எக்ஸ் தளத்தில் பாதிக்  கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்களை யும் தங்கள்  கவலையையும் தெரி வித்தனர்.

சுனாமி அபாயம் இல்லை

மொராக்கோவில் நில அதிர்வு  கண்காணிப்பு சேவையின் தலை வர் லாஹ்சென் ம்ஹன்னி கூறுகை யில், இந்த நடுக்கத்திற்கு பின்பும் பல்லாயிரக்கணக்கான தொடர் அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், அவை அதிகபட்சம் ஐந்து ரிக்டர்  அளவில் ஏற்பட்டதாகவும் கூறினார். “பல்லாயிரக்கணக்கான  தொடர் அதிர்வுகள் இன்னும் பதிவு  செய்யப்படும், ஆனால் அவை நில நடுக்கத்தை ஏற்படுத்திய அளவை  விட குறைந்த அளவாக  இருக்கும் எனவும், காலப்போக்கில், புவி யியல் உள்கட்டமைப்பு மீண்டும் சமநிலை அடையும் வரை அவை  படிப்படியாகக் குறையும் என்றும்  அவர் கூறினார். இந்த நிலநடுக்கத் தால் தற்போது சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்ட மொரோக்கோ மக்களுக்கு மீட்பு மற்றும் முதலுதவி நடவ டிக்கைகளில் உதவ மீட்புக் குழு, மருத்துவ உதவிப் பொருட்களை தர பல நாடுகள் முன்வந்துள்ளன