world

img

தீக்கதிர் உலக செய்திகள்

மொராக்கோ உயிரிழப்பு 2,800யை கடந்தது 

வெள்ளியன்று  இரவு மொராக்கோ நாட்டின் சுற்றுலா நகரமான  மாரகேஷில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு 2,862 ஆகவும், காயமடைந்தவர்களின்  எண்ணிக்கை 2,562 ஆகவும் உயர்ந்துள்ளது.நிலநடுக்கத்தில் அதிகம் பாதிக்கப் பட்ட அட்லஸ்  மலை பகுதியில் உள்ள தொலைதூர  கிராமங்களை மீட்புப்படை இன்னும் முழுமையாக சென்றடையவில்லை என கூறப்பட்டுள்ளது. முழுமையாக சென்றடையவில்லை என கூறப்பட்டுள்ளது.

எகிப்தில் பொருளாதார நெருக்கடி

எகிப்து நாட்டின் பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் 39.7 சதவீதம் என புதிய உச்சத்தை எட்டியுள்ளது. உணவுப்  பொருட்கள்  71.9 சதவீதமும், போக்குவரத்திற்கு   15.2 சதவீதமும், ஆடை களின் விலையில் 23.6 சதவீதமும் அதிகரிப்பதாக அந்நாட்டு அர சின் அதிகாரப்பூர்வ புள்ளியியல் துறை அறிவித்துள்ளது.

ரஷ்ய பொருட்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் 

உக்ரைன் போரை தொடர்ந்து வெளிநாட்டு சில்லரை விற் பனையாளர்கள் தங்கள் நிறுவனங்களை மூடிவிட் டனர். இந்நிலையில் ரஷ்ய தயாரிப்பு பொருட்கள் அதிகளவு அங்கீகாரம் பெறும் வகையில் உற்பத்தி செய்யப்பட வேண்டு மென ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக்கில் நடைபெற்ற பொரு ளாதார மாநாட்டில் ஜனாதிபதி புடின்  வலியுறுத்தியுள்ளார்.

இஸ்லாமியக் குடும்பத்தை லாரி ஏற்றி கொலை செய்த பயங்கரம்

2021 ஆம் ஆண்டு லண்டன் ஒண்டாரியோ  நகரில்  நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த சல்மான் என்ற இஸ்லாமியரின் குடும்பத்தின் மீது லாரி ஏற்றி நான்கு நபர்களை  கொலை செய்த கனடா நாட்டைச்சேர்ந்த நத்தானியேல் , வெள்ளை இனவெறியால் அக்கொலையை செய்ததா கவும் வாகனங்கள் மூலம் இஸ்லாமியர்களை கொலை செய்யலாம் என காட்ட இதை செய்தேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

ஜனாதிபதியின் புகைப்படத்தை மாற்றிய பைடன் 

ஜி 20 மாநாடு முடிந்தவுடன் வியட்நாம் சென்ற  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திங்களன்று வியட்நாம் ஜனாதி பதிக்கு நன்றி தெரிவிப்பதற்காக ட்விட்டர் (x) தளத்தில், ஜனாதி பதி வோ வான் துவாங் கிற்கு பதிலாக அந்நாட்டு தேசிய சட்ட மன்ற தலைவரின் புகைப்படத்தை பதிவிட்டது  விமர்சனத்தை எழுப்பியுள்ளது.பின் அப்பதிவை அவர் நீக்கியுள்ளார்.