பாக் விமானிகளுக்கு மருத்துவக்குழு வழிகாட்டுதல்
நோன்பு நாட்களில் பணியில் ஈடுபட வேண்டாம் என பாகிஸ்தான் தேசிய விமானப் போக்குவரத்து நிறுவன ஊழி யர்களுக்கு மருத்துவக் குழு வழிகாட்டுதல் கொடுத்துள்ளது.நோன்பு நாட்களில் விமானி கள் மற்றும் பணியாளர்களுக்கு சோர்வு ஏற்பட லாம். அதனால் விமானத்தை இயக்கும் பணிக ளில் ஈடுபட வேண்டாம். அது பயணிகள் உட்பட அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என பாகிஸ்தான் விமான நிறுவனமருத்துவக் குழு வழிகாட்டுதல் கொடுத்துள்ளது.
இரும்பு நுரையீரல் உதவியுடன் வாழ்ந்த மனிதர் மரணம்
போலியோ நோயால் பாதிக் கப்பட்டு இரும்பு உருளையில் வாழ்ந்து வந்த பால் அலெக்சாண்டர் என்ற நபர் தமது 70 ஆவது வயதில் காலமானார். 6 வயதில் போலியோ நோயால் பாதிக்கப் பட்டு கழுத்துக்கு கீழே செயலிழந்த அவர் இரும்பு நுரையீரல் என்று அழைக்கப்படும் இரும்பு உருளையின் உதவியுடன் வாழ்ந்து வந்தார். சமூக ஊடகங்கள் வளர்ந்த போது, அதன் மூலம் மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி வந்த அவர் தற்போது மரணமடைந்துள்ளார்.
அமெரிக்க ஆதிக்கத்தை உடைக்க சீனாவின் சுயசார்பு தொழில்நுட்பம்
சீன அரசு நிறுவனங்கள் அமெரிக்க மென்பொருள், வன்பொருள்களை கைவிட்டு சொந்த நாட்டு தொழில் நுட்பங்க ளை பயன்படுத்தத் துவங்கியுள்ளன. ஆவ ணம் 79 (Document 79) திட்டத்தின்படி 2027 ஆம் ஆண்டிற்குள் அரசு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் 100 சதவீதம் வரை அமெரிக்க மென்பொருளிலிருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளன. இது அமெரிக்காவின் தொழில் நுட்ப ஆதிக்கத்தை உடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய உற்பத்தியை அதிகரிக்க இலங்கை அரசு திட்டம்
2024 ஆம் ஆண்டில் உள்நாட்டு விவசாயத் துறையை மேம் படுத்த 7.5 லட்சம் அமெரிக்க டாலர்களை இலங்கை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. வீட்டுத் தோட்டத் திட்டங்களுக்காக இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விவசாயத்துறை அமைச்சர் மோகன் பிரிய தர்ஷன் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு 36 லட்சம் மெட்ரிக் டன் நெல் அறுவடையை இலக்காக வைத்து விவசாய உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தம்
ஜெர்மனியின் லுப்தான்சா விமான நிலையத்தில் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட னர். இதனால் சுமார் 600 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு 70,000 பயணிகள் பாதிப்படைந்தனர்.18,000 தொழிலாளர்களின் ஆரோக்கியமான பணிச் சூழல், பண வீக்கத்திற்கு ஏற்ப 15 சதவீத ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.