world

img

தீக்கதிர் உலக செய்திகள்

சர்வதேச பாலஸ்தீன ஆதரவு தின பேரணி

சர்வதேச  பாலஸ்தீன ஆதரவு தினம் ஆண்டு தோறும் நவம்பர் 29 அன்று  கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தாண்டு சர்வதேச பாலஸ்தீன ஆதரவு தினத்தில் ரஷ்யா,தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஈரான், இங்கி லாந்து, ஜப்பான் என பல நாடுகளில் லட்சக்க ணக்கானோர் பேரணி நடத்தி நிரந்தர போர்  நிறுத்தத்தை வலியுறுத்தி ரஷ்யாவில் நடை பெற்ற பேரணியில் அந்நாட்டு துணை வெளி யுறவுத்துறை அமைச்சர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

கடல்வழியே தண்ணீரை கொண்டுவர திட்டம்

ஸ்பெயினின் தன்னாட்சிப் பகுதி யான காட்டலோனியாவில் வறட்சியின் காரணமாக தண்ணீருக்குக் கடு மையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள் ளன. அதன் தலைநகரான பார்சிலோனாவுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கடல் வழியே தண்ணீர் கொண்டுவர இருப்பதாக நிர்வாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அந் நகரில் உள்ள 60 லட்சம் மக்களுக்கு ஆதார மாக இருந்த ஏரிகளின் கொள்ளளவில் தற் போது 18 சதவிகிதமே தண்ணீர் இருக்கிறது.

1.40 லட்சம் இந்திய மாணவா்களுக்கு விசா

கல்லூரிகள் துவங்குவதற்கு முன்பா கவே 1.40 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவா்களுக்கு விசா வழங்கப் பட்டதாக அமெரிக்க விசா சேவை பிரிவு துணை உதவி அமைச்சர் ஜுலி   தெரிவித்தார்.இதற்காக, இந்தியாவில் உள்ள அமெரிக்க துணை தூதரகங்கள் வாரத்தில் 6 நாள்கள் மாணவா்களுக்கு நோ்காணல் நடத்தின என் றும் வரலாற்றில் முதல்முறையாக, பத்து லட்சம் இந்தியா்களுக்கு விசா வழங்க இலக்கு நிர்ண யித்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக தன் பாலினத் திருமணம் பதிவு

தெற்கு ஆசியாவிலேயே முதல்முறை, தன் பாலினத் திருமணத்தை நேபாள அரசு  அதிகாரப்பூா்வமாகப் பதிவு செய்துள்ளது.தன் பாலின திருமணத்திற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் கடந்த 2007-ஆம் ஆண்டே அனுமதி  அளித்த நிலையில்  மாயா குருங் என்ற திருநங்கைக்கும், சுரேந்திர பாண்டே என்பவருக்கும் நடைபெற்ற தீர்மா னம் பதிவு செய்யப்படாமல் பல ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு தற்போது சட்ட ரீதியாகபதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேற்கு கரையில் இரண்டு குழந்தைகள் கொலை

ஹமாஸ் உடன் போர்நிறுத்தம் உள்ள நிலையிலும்  பாலஸ்தீன மேற்கு கரையில் 8 மற்றும் 15 வயதுள்ள இரண்டு  பாலஸ் தீன சிறுவர்களை சுட்டுக் கொலை செய்துள் ளது இஸ்ரேல் ராணுவம். இஸ்ரேல் ராணுவம் மேற்கு கரையில் தொடர்ந்து  நடத்தி வரும் தாக் குதலுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில் ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேல் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என கூறி யுள்ளது.