world

img

இந்தியர்கள் நியூசிலாந்திற்குள் நுழைய தடை

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் இந்தியர்கள் நியூசிலாந்துக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. 
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உச்சத்தில் உள்ளது. நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 126789 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் அமெரிக்கா பிரேசிலைத்தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3வது நாடாக இந்தியா உள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் 11ம் தேதி முதல் 28ம் தேதி வரை இந்தியாவில் இருந்து பயணிகள் நியூசிலாந்திற்குள் நுழைய அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தடைவிதித்துள்ளார். இந்தியாவில் இருந்த வரும் தங்கள் நாட்டு குடிமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நியூசிலாந்தில் நுழைய அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
இந்தியாவில் இருந்து வரும் பலருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

;