world

img

சிங்கப்பூரில் கொரோனா : மக்களுக்கு மீண்டும் முகக் கவசம்

சிங்கப்பூர்,மே.19- சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா தோற்று அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால்  மக்களை மீண்டும் முகக்கவசம் அணிய அந்நாட்டு சுகாதாரத் துறை வழிக்காட்டியுள்ளது . மேலும் புதிதாக தொற்று பரவும் வேகத்தையும் சுகாதாரத் துறை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. மே 11 வரை கொரோனா தொற்றுக்குள்ளா னவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிக ரித்துள்ள நிலையில்  சுகாதாரத் துறை அமைச்சர் ஓங் யே குங் சனிக்கிழமை  இந்த அறிவிப்பை வெளியிட்டார்.  “நாங்கள் கொரோனா அலையின் ஆரம்பத்தில் இருக்கிறோம், அது படிப்படியாக உயர்ந்து வருகிறது” என்று சுகாதார அமைச்சர் ஓங் யே குங் குறிப்பிட்டுள்ளார். மேலும்  அடுத்த இரண்டு முதல் நான்கு வாரங்களில் கொரோனா பரவல்   உச்சமாக இருக்கலாம்  என்றும் தெரிவித்துள்ளார்.  சுகாதார அமைச்சக தகவலின் படி, மே மாதம் 5 அன்று 13,700 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மே 11 அன்று 25,900 பேர் என இரு மடங்காக ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒவ்வொரு நாளும்  181 முதல் சுமார் 250 பேர்கள் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு மருத்துவமனை வந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ மனைகளில்  படுக்கை வசதிகளை அதிகரிக்கவும்,பராமரிக்கவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஒத்திவைக்க முடியும் என்ற நிலையில் உள்ள சில அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தற்போது வரை முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேறு எந்த சமூக கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தவில்லை, தேவைப்படும் பட்சத்தில் அதுவும்  இறுதி நடவடிக்கை யாக மட்டுமே இருக்கும் என்றும் கூறிய  ஓங் யே  கடந்த ஒரு ஆண்டாக தடுப்பூசி போடாதவர்கள், 60 வயதிற்கு மேற்ப்பட்ட மற்றும் உடல் நல குறைபாடு உடையவர்கள் என அனைவரும் மீண்டும் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

;