பியூனஸ் அயர்ஸ், டிச.14- ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தினத்தைக் கொண்டா டும் வகையில் ஆயிரக்கணக்கான மக்கள் அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் கூடி தலை வர்களின் உரைகளைக் கேட்டனர். சர்வாதிகார ஆட்சியின் கீழ் ஏராளமான துயரங்களை அர் ஜெண்டினா மக்கள் அனுபவித் தார்கள். அதற்கு எதிரான போரா ட்டங்கள் கடுமையாக ஒடுக்கப் பட்டன. பெரும் தியாகங்களுக்குப் பிறகு பெற்ற ஜனநாயகத்தைப் பாது காக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 11 ஆம் தேதி யன்று ஜனநாயக தினத்தை அர் ஜெண்டினா மக்கள் அனுசரித்து வருகிறார்கள். இந்த ஆண்டு நடந்த நிகழ்வில் பல தலைவர்கள் பங்கேற்றனர்.
அர்ஜெண்டினாவின் ஜனாதி பதி ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸ், துணை ஜனாதிபதி கிறிஸ்டினா கிரிச்னர், பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி லூலா டி சில்வா மற்றும் உருகுவேயின் முன்னாள் ஜனாதிபதி ஜோஸ் முஜிகா ஆகி யோர் மக்களிடம் உரையாற்றினார் கள். ஜனநாயகத்தை மீட்டு 38 ஆண்டுகால அனுபவங்களைப் பற்றிப் பேசிய தலைவர்கள், ஒட்டு மொத்த தென் அமெரிக்க நாடுக ளுக்கு உத்வேகமாக அர்ஜெண்டி னா இருக்கிறது
என்று குறிப்பிட் டனர். அர்ஜெண்டினா நேரப்படி மாலை 7.30 மணிக்கு ஒரே மேடை யில் தோன்றிய நான்கு தலைவர்க ளும், ஜனநாயகத்தை நிரந்தரப் படுத்த வேண்டிய அவசியத்தை வலி யுறுத்தினர். முற்போக்கான மற்றும் மனிதநேயமுள்ள அரசுகள் அமைக் கப்பட்டது நமது சொந்த மண்ணில் ஜனநாயகத்திற்கான சிறப்பான தருணமாகும் என்று லூலா தெரி வித்தார். ஜனநாயகம் என்ற பெயரில் அர்ஜெண்டினாவில் மக்களுக்குத் துயரம் தரும் நடவடிக்கைகளை மேற்கொண்ட நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்தார் அர்ஜெண்டினாவின் துணை ஜனாதி பதி கிறிஸ்டினா கிரிச்னர். நிறைவாகப் பேசிய அர்ஜெண்டி னா ஜனாதிபதி ஆல்பர்டோ பெர் னாண்டஸ், “சர்வதேச நிதியத்திடமி ருந்து வாங்கிய 4 ஆயிரத்து 400 கோடி டாலர் கடனை நாம் திருப்பிச் செலுத்தி விடுவோம். அதற்காக சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் மக்களைத் துன்புறுத்த மாட்டோம்” என்று உறுதியளித்தார்.
எந்த நாளில் இதை நமது தோள் மீது ஏற்றுக் கொண்டோமா, அந்த நாளில் ஒரு உறுதியையும் நாம் எடுத்துக் கொண்டோம். பொது சுகாதாரம், பொதுக் கல்வி, ஊதி யங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் மீது கைவைத்து இந்தக் கடனை செலுத்த மாட்டோம் என்று குறிப்பிட்டார். ஜனநாயகத்திற்கான மாநாடு என்ற பெயரில் அமெரிக்கா நாடகமாடிக் கொண்டிருக்கையில் அமெரிக்க ஆதரவு சர்வாதி காரத்தால் தென் அமெரிக்க நாடுகள் எப்படி சீரழிக்கப்பட்டன என்று அர்ஜெண்டினாவில் நடக்கும் கொண்டாட்டங்கள் மற்றும் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.