world

img

‘இயற்கையுடன் சமாதானமாக வாழ்வோம்’

மாண்ட்ரீல் நகரில் பாலேஸ் டெஸ் காங்கர்ஸ் (Palais  Des congres) என்ற இடத்தில் நடந்து வரும் காப்15 மாநாட்டில் இருந்து நம்பிக்கையூட்டும் செய்திகள் வரு கின்றன. பூச்சிக்கொல்லிகள் முதல்  பிளாஸ்டிக் வரை, மண் வளம் முதல்  மனித வன விலங்கு மோதல் வரை இயற்கையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு 194 நாடு களின் பிரதிநிதிகளுக்கு இடையில் இதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிர மடைந்துள்ளன. இயற்கை மீட்பு முதல் நோய் தகவல்களைப் பகிர்தல் வரை உயிர்ப் பன்மயத்தன்மையை காப்பாற்ற மாநாட்டின் முடிவில் உடன்படிக்கை ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

இயற்கைப் பாதுகாப்பு

2020க்குப் பிந்தைய உயிர்ப் பன்மயத்தன்மை ஒப்பந்தம் (2020 Post Biodiversity Framework) எனப்படும் இறுதி அறிக்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஆத ரவு தரும் பூமியின் நிலம்  மற்றும் கடற்பரப்பில் 30 சதவிகிதத்தை உயிர்ப் பன்மயத்தன்மை பாது காப்பிற்காக 2030ஆம் ஆண்டிற்குள் ஒதுக்கும் 30x30 திட்டம்  முக்கிய இலக்காகக் கருதப்படுகிறது.

பாதி பூமி கோட்பாடு

லத்தின் வருங்காலப் பயன்பாட்டிற் காக பாதுகாப்பது என்ற ஹார்வர்டு பல்கலைக்கழக உயிரியல் பேரா சிரியர் எட்வர்டு ஓ வில்சனின்   “பாதி  பூமி” (Half Earth) என்ற  கொள்கை யில் இருந்து உருவானது. இந்த இலக்கை அடைய யுகே, பிரான்ஸ், கோஸ்ட்டாரிக்கா ஆகியவை அடங்கிய குழு தீவிர முயற்சி செய் கிறது. இந்த அம்சம் காலநிலை மாநா ட்டின் 1.5 டிகிரி இலட்சியத்தைப் போன்றது என்று சூழல் ஆய்வாளர் ஸ்டீவன் கில்போல்ட்  கூறுகிறார்

பூச்சிக்கொல்லிகள்

ஜெர்மனி முதல் குவாட்டோ ரீக்கோ வரை சூழலைக் காப்பதில் முக்கியப்பங்கு வகிக்கும் பூச்சிகள் மிதமிஞ்சிய ரசாயனங்களின் பயன்பாட்டால் குறைந்துவருகிறது. இப்பொருட்களின் பயன்பாட்டை மூன்றில் இரண்டு பகுதியாக குறை க்கும் அம்சமும் காப்15இல் தீவிர மாகப் பரிசீலிக்கப்படுகிறது. 2030-க்குள் 50% பூச்சிக்கொல்லிகளை குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் இலட்சியம் வைத்துள்ளது. இது பற்றிய உடன்படிக்கை இல்லாத காப்15 மாநாடு தோல்வியடையும் என்று மண் கூட்டமைப்பு பன்னா ட்டு  இயக்கத்தின் தலைவர் கேரத்  மார்கன் கூறுகிறார்.  இவற்றை குறை க்காவிட்டால் வன உயிரினங்களை நம்மால் காப்பாற்றமுடியாது.

இன அழிவும் மானியங்களும்

இன அழிவை சந்திக்கும் ஆபத்து டன் பூமியில் வாழும் ஒரு மில்லியன் உயிரினங்களை அழிவில் இருந்து காப்பது தொடர்பான உடன்படிக்கை ஏற்படும் என நம்பப்படுகிறது. வன  உயிரிகளை அழித்து புவி வெப்ப உய ர்வுக்குக் காரணமாகும் மானியங் களுக்கு ஒவ்வொரு ஆண்டும் உல கநாடுகள் 1.8 டிரில்லியன் டாலர் களை செலவிடுகின்றன. இறைச்சிக்காக மாட்டுப் பண்ணைகள் அமைக்க அமேசான் காடுகளை அழிக்க பன்னாட்டு பணக் கார நிறுவனங்களுக்கு கொடுக்கப் படும் நிதிச்சலுகை முதல் வளை குடா நாடுகளில் சூழலைச் சீரழித்து பூமியைத் தோண்டி நீர் எடுக்கும் திட்டங்கள் வரை இந்த உதவிகள் அனைத்தும் மக்கள் வரிப்பணத்தில் இருந்தே கொடுக்கப்படுகிறது. 2025 வரை மானியம் வழங்குவதை 409 பில்லியன் டாலர்களாகக் குறைக்கலாம் என்று சில நாடுகள் கூறும் யோசனையை வேறு பல நாடு கள் எதிர்த்து வருகின்றன. பிளாஸ்டிக் மாசு முதல் 

பிளாஸ்டிக் மாசு முதல் ஆக்கிரமிப்பு உயிரினங்கள் வரை

சமீபத்தில் உருகுவேயில் நடந்த பிளாஸ்டிக் குறைப்பு மாநாட்டில் உற்பத்தி முதல் பயன்பாடு வரை  பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் இல்லாமல் செய்ய ஒப்புக்கொள்ளப் பட்டது. இந்த முயற்சிக்கு காப்15 மாநாட்டில் வலுவூட்டப்படும் என்று நம்பப்படுகிறது. சூழலை நாசப் படுத்தும் முயல்கள், ஜப்பானிய நாட்வீடு (Knotweed), காட்டுப் பன்றிகள் போன்ற ஆக்கிரமிப்பு தாவர விலங்கினங்கள் மனிதனால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டவை. இது பற்றி 2023-இல் உலகளாவிய விரிவான அறிக்கை நிபுணர்களால் சமர்ப்பிக்கப்படும். இந்த உயிரினங்களின் எண்ணிக் கையைப் பாதியாகக் குறைக்க வரைவு அறிக்கையில் திட்டம் உள் ளது. இது இயற்கை வளங்களைப் பாதுகாக்க பெரிதும் உதவும். முயல் கள், ஆடுகள் போன்ற உயிரினங் கள் இல்லாமல் செய்யப்பட்டதால் கரீ பியன் பகுதியில் உள்ள ரிடாண்டா (Redanda) தீவில் வெறும் சாம்பல் நிறப் பாறைகளாக இருந்த நிலம் மீண்டும் பசுமையடைந்துள்ளது.

இயற்கை வளப் பாதுகாப்பு

வளமிழந்த நிலம், கடற்பரப்பு மற்றும் கடலோரப்பகுதிகள் உட்பட்ட ஒரு பில்லியன் ஹெக்டேர் பகுதியை வளம் மிக்கதாக மாற்ற இலக்கு நிச்ச யிக்கப்பட்டுள்ளது. இது சீன நாட்டின் பரப்பிற்கு சமமானது. இந்த அளவு பெரும்பரப்பை மறு வனமாக்குதல், மீட்பு, வளமிக்கதாக மாற்றுவதால் பூமியின் உயிர்ப் பன்மயத்தன்மை காக்கப்படும் என்று நம்பப்படுகிறது. உயிரினப் பேரழிவுக்கு மனிதன் ஆயுதமாக மாறுவதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று ஐ நா  தலைவர் ஆண்டோனியோ குட்ட ரெஸ் இம்மாநாட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்பிரிக்க யானை கள் போன்ற வன உயிரினங்களை பொழுதுபோக்கிற்காக வேட்டை யாடுவதை (trophy hunting) தடுப் பது, ஆப்பிரிக்கப் புல்வெளிப்பகுதி கள் அழிவைக் குறைப்பது போன்ற வற்றை தெற்கு ஆப்ரிக்க நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

சீனா என்ன செய்கிறது?

தொடக்கநாளில் மாநாட்டிற்கு வருகை தருவோரை சீனப் பிரதிநிதி கள் புகழ்பெற்ற சீனாவின் பட்டு பொன் னாடை மற்றும் தேயிலைத்தூள் கொண்ட வரவேற்புப் பையை வழங்கி கௌரவித்தது. அமெரிக் கா, ஐரோப்பிய நாடுகள் புவி வெப்ப  உயர்வுக்குக் காரணமாக இருக்கும் கார்பன் உமிழ்வில் பெரும்பங்கு வகிக்கும் நிலையில் சீனா சூரிய  சக்தி, காற்று ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் மிகப்பெரிய திட்டங்களை முழு மூச்சுடன் செயல்படுத்தி வருகிறது. சீனா தலைமையேற்று நடத்தும் காப்15 மாநாடு முழு வெற்றியடைய சீனத் தலைவரின் ஒத்துழைப்புடன் பாடுபடுகிறது. சுமார் 10,000 பேர் பங்கேற்கும் காப்15 மாநாடு டிசம்பர் 19 வரை நடைபெறுகிறது. சமீபத்தில்தான் உலகம் எண்ணூறாவது கோடி மனி தரை வரவேற்றது. இது மகிழ்ச்சி யான செய்திதான். ஆனால் உயிரிப் பன்மயத்தன்மையைப் பொறுத்த மட்டும் மனிதன் இன்று இயற்கை யுடன் போர்செய்துகொண்டிருக்கிறான். இயற்கையுடன் நாம் சமாதான மாக வாழவில்லை என்றால் விளைவு கள் அழிவின் பாதையிலேயே பூமி யை மட்டும் இல்லாமல் மனிதனை யும் இட்டுச்செல்லும். இந்நிலை ஏற் படாமல் தடுக்க இயற்கைப் பாது காப்பை உறுதிப்படுத்த  மாண்ட்ரீலில் கூடியிருக்கும் காப்15 மாநாட்டில் இருந்து வரும் செய்திகள் நம்பிக்கை யூட்டுவதாக அமைந்துள்ளது.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்