ஐ.நா. மே 15- போர் இயற்கை பேரழிவுகளால் கடந்தாண்டு 7.6 கோடி மக்கள் தங்கள் நாடுக ளுக்குள் இடம்பெயர்ந்துள்ளனர் என இடப்பெயர்வு கண்காணிப்பு குழு தெரி வித்துள்ளது. உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 50 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் கடந்த 10 ஆண்டுகளில் தோராயமாக இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது. மேலும் அது வெளியிட்டுள்ள அறிக்கை யில் 4.69 மக்கள் 2023 ஆம் ஆண்டு வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரழிவுக ளால் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இடம் பெயர்ந்துள்ளதை குறிப்பிட்டுள்ளது. இடம்பெயர்ந்து வாழும் 7 கோடிக்கும் அதிகமான மக்களில் பெரும்பான்மையோர் துணை சகாரா பகுதியைச் சேர்ந்தவர்கள் என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.மேலும் 90 சதவீதமான இடப்பெயர்வுகளுக்கு முதன்மைக் காரணமாக போர், உள்நாட்டுப் போர், வன்முறை ஆகியவையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 சதவீத இடப் பெயர்வுகள் மட்டுமே இயற்கைப் பேரழிவுக ளால் நடந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. அகதிகள் நிறுவனம், மக்கள் எல்லைகள் கடந்து இடம்பெயர்வதை மட்டும் கண்காணித்து வருகிறது. ஆனால் ஐ.நா. இடம்பெயர்வு நிறுவனம் பொருளாதாரம், வாழ்க்கை முறை ஆகியவை பாதிக்கப்படும் போது மக்கள் இடம்பெயரத் தள்ளப்படும் அனைத்து வகை இடப்பெயர்வுகளையும் கண்காணித்து அறிக்கை தருவது குறிப்பி டத்தக்கது.