world

img

இங்கிலாந்தில் 40,000 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு!

கொரோனா வைரஸின் உருமாறிய வகையான ஒமிக்ரான் பாதிப்பு உலகம் முழுவதும் அதி வேகமாக பரவி வருகிறது.
டெல்டா வகை  கொரோனாவைவிட ஒமிக்ரான் தொற்றால் தீவிர பாதிப்பு இருக்காது என முதல்கட்ட ஆய்வு முடிவுகள் கூறினாலும், இதன் பரவல் வேகம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, பிரிட்டனில் ஒமிக்ரான் அதிவேகமாகப் பரவி வருகிறது.
சனிக்கிழமை நிலவரப்படி ஒரே நாளில் புதிதாக 10,059 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 91,743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில்12,133 பேருக்கு ஒமிக்ரான்பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில், நேற்று திங்கள்கிழமை நிலவரப்படி பிரிட்டனில் ஒமிக்ரான் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து 40,000-யைக் கடந்திருக்கிறது.
மேலும் இங்கிலாந்தில் அதிவேகமாக பரவி வரும் ஒமைக்ரான் தொற்றால் விரைவில் அங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

;