world

img

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியை தாலிபன்கள் கைப்பற்றி உள்ள நிலையில் அந்நாடு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் ஆப்கனில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பைசாபாத்திலிருந்து 83 கிமீ தொலைவில் 230 கி.மீ ஆழத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் எற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை

 

;