ஆப்கான் தலைநகர் காபூலில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 2 ரஷ்ய தூதர்கள் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ரஷ்யத் தூதரகத்தில் திங்களன்று காலை விசா பெறுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 2 ரஷ்ய தூதர்கள் உள்ளிட்ட 20 பேர் பலியாகி உள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் குண்டு வெடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த ஆப்கானிஸ்தான் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாக வில்லை.