அமெரிக்காவை கண்டித்து பனாமா தொழிலாளர்கள் போராட்டம்
பனாமா நாட்டிற்கு சென்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சீனாவுடனான உறவை பனாமா குறைக்க வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார். தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு பனாமா அரசாங்கம் அடிபணிய வேண்டாம் என்றும் முழங்கி பனாமா தொழிற்சங்கங்கள் அமெரிக்காவை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளன. பனாமா நாட்டிற்கு சென்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சீனாவுடனான உறவை பனாமா குறைக்க வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார். தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு பனாமா அரசாங்கம் அடிபணிய வேண்டாம் என்றும் முழங்கி பனாமா தொழிற்சங்கங்கள் அமெரிக்காவை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளன.
ரஷ்ய நாடாளுமன்ற கீழவைத் தலைவர் இந்தியா வருகை
ரஷ்ய நாடாளுமன்ற கீழவைத் தலைவர் வியா செஸ்லாவ் வோலோடின் இந்தியா வந்தடைந் தார். இதனை இந்திய வெளியுறவுத் துறை அமைச்ச கம் உறுதிப்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான தொழில்நுட்பத் துறை, பொருளாதா ரம், கலாச்சாரம், கல்வி ஆகிய துறைகளில் ஒத்து ழைப்பை மேம்படுத்துவது,அதில் உள்ள சிக்கல் களை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 இறுதியில் நடைபெறும் இந்தியா-ரஷ்ய உச்சி மாநாடு தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
‘அமெரிக்காவின் முடிவை மாற்ற உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும்’
உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெ ரிக்கா விலகும் முடிவை டிரம்ப் கைவிட உலகத் தலைவர்கள் அமெரிக்காவை வலியுறுத்த வேண்டுமென உலக சுகாதார அமைப்பு கேட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் பட்ஜெட் கூட்டத்தில் பேசிய போது அவ்வமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட் ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார். உலக சுகாதார அமைப்பிற்கு அதிக நிதி உதவி செய்யும் நாடாக உள்ளது அமெரிக்கா. இந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் போது உல கம் முழுவதும் உலக சுகாதார அமைப்பின் சேவை கள் நெருக்கடியை சந்திக்கும்.
டிரம்பின் திட்டத்தை கண்டித்த ஈரான்
காசாவில் இருந்து பாலஸ்தீனர்களை வேறு இடத்திற்கு மாற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் திட்டத்தை ஈரான் கண்டித்துள்ளது. இது இன அழிப்புத் திட்டம் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது. மேலும் இன அழிப்புக்கு இணையான திட்டங்களை முன் வைப்பதை விட பாலஸ்தீனர்களின் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாக்க சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என்றும் ஈரான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் தெரிவித்துள்ளார்.
‘குழந்தைகள் படுகொலை எதிர்காலத்தை அழித்தல்’
குழந்தையின் உயிருக்கு மதிப்பு எதுவும் கொடுக் கப்படுவதில்லை என போப் பிரான்சிஸ் பேசி யுள்ளார். மேலும் உலகளவில் நடைபெற்று வரும் போர்களில் குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தார். காசாவில் இஸ்ரேலின் படுகொலைகள் உக்ரைன் - ரஷ்யா போர் ஆகியவற்றையும் கண்டித்தார். சமீப காலமாக குண்டுகளால் குழந்தைகள் படுகொ லையாவதை நாம் ஒவ்வொரு நாளும் வேதனையுடன் பார்த்து வருகின்றோம். இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. குழந்தைகளைப் படுகொலை செய்வது எதிர் காலத்தை அழிக்கும் செயல் எனவும் குறிப்பிட்டார்.