வெள்ளி, பிப்ரவரி 26, 2021

world

img

இஸ்ரேல் பிரதமர்  பதவி விலகக் கோரி போராட்டம் ....

ஜெருசலேம்:
ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி புகாரில் சிக்கிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பதவி விலகக் கோரி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஊடக நிறுவனங்கள், கோடீஸ்வரர்கள் ஆகியோரிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டதாக பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக மோசடி, நம்பிக்கை மோசடி, ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பிரதமர் நேதன்யாகுவை விசாரணைக்கு உட்படுத்தாதவரை நாட்டை சீராக நிர்வகிக்க முடியாது என்றும் அவர் பதவி விலகக்கோரியும்  ஜெருசேலம் நகரில் உள்ள நேதன்யாகுவின் அதிகாரப்பூர்வ இல்லத்தி்ன் அருகே மக்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.  இஸ்ரேல் அரசு கொரோனோ வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கையாண்ட முயற்சிகள், நடவடிக்கைகள் மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது, போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

;