world

img

தீக்கதிர் உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு உதவும் மைக்ரோசாப்டை கண்டித்த தொழிலாளர்கள் கைது

   இஸ்ரேல் ராணுவத்துடனான தங்கள் நிறுவ னத்தின் உறவுகளை கண்டித்துப் போராடிய மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேல் ராணு வத்தின் இனப்படு கொலை தாக்குத லுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் தொழில் நுட்ப உதவிகளை செய்து வருகிறது. இதனை கண்டித்து மைக்ரோசாஃப்ட் தலைமை யகத்தில் ஊழியர்கள் இரண்டு நாட்களாக போராட் டங்கள் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 18 தொழில் நுட்ப ஊழியர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

அமெ.துணை ஜனாதிபதி வான்ஸ் எலான் மஸ்கிற்கு எச்சரிக்கை  

அமெரிக்க துணை ஜனாதிபதியான ஜே.டி. வான்ஸ் எலான் மஸ்க் அரசியல் கட்சியைத் துவங்கக் கூடாது என எச்சரித்துள்ளார். மேலும் எலான் மஸ்க் குடியரசுக் கட்சிக்குள் இருந்து பணியாற்றி னால் அதிக செல் வாக்கை செலுத்தலாம் என்றும் அவர் கூறி யுள்ளார். “அமெரிக்கா கட்சி” என்ற பெயரில் ஒரு புதிய அரசியல் கட்சியைத் துவங்கப் போவதாக மஸ்க் கூறிவந்த நிலையில் அத்திட்டத்தை கைவிட்டு தனது நிறுவனங்களில் கவனம் செலுத்த முடி வெடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில் வான்ஸ் இவ்வாறு பேசியுள்ளார்.