வாஷிங்டன், டிச.17- சீனாவுக்கு எதிரான குவாத் கூட்டணியில் வங்கதேசமும் இணைய வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது. தனக்கென்று ஒரு எதிரியை உருவாக்கிக் கொண்டு, அந்த எதிரி உலகத்திற்கே எதிரி என்ற பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து பிற நாடுகளைத் தனது மேலாதிக் ்கத்தின் கீழ் வைத்திருப்பது அமெ ரிக்காவின் வழக்கமாகும். தற்போது பொருளாதாரத்தில் தனக்குப் போட்டியாக வளர்ந்து நிற்கும் சீனாவை எதிரியாகச் சித்தரித்து வருகிறது. குவாத் கூட்டணியில் வங்கதேசம் சேர வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டிக் கொண்டிருக்கிறது. 2018 ஆம் ஆண்டில் சில மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட தாகச் சொல்லி வங்கதேச அதிர டிப்படை மீது அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. அந்தப் படை யின் இன்னாள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் ஏழு பேர் மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜோ பைடன் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கையில் மனித உரிமைகள்தான் மைய மானதாக இருக்கும் என்பதை நாங்கள் உறுதி செய்வோம் என்கி றார் அமெரிக்க வெளியுற வுத்துறை அமைச்சர் அன்டோனி பிலின்கன்.
பொருளாதார வளர்ச்சியின் மூலமாக உலக நாடுகளின் கவ னத்தை அண்மைக்காலத்தில் வங்கதேசம் ஈர்த்துள்ளது. சீனாவு டனான உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொண்டி ருக்கிறார்கள். இரு தரப்புக்கும் பலனளிக்கும் பல்வேறு வர்த்தக உடன்பாடுகளில் சீனாவும், வங்கதேசமும் கையெழுத்து இட்டிருக்கின்றன. அதிரடிப்படை மற்றும் அதன் அதிகாரிகள் மீது போடப்பட்டிருக்கும் தடைக ளுக்கு உடனடியாக வங்கதேசம் கண்டனம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்திற்கான அமெ ரிக்கத் தூதர் ஏர்ல் மில்லரை அழைத்துத் தங்கள் அதிருப்தி யை அமெரிக்க அரசிடம் தெரிவிக்குமாறு வங்கதேசத்தின் வெளியுறவுத்துறை செயலாளர் மசூத் பின் மோமன் வலியு றுத்தியுள்ளார். சீனாவிடம் ஏற் பட்டுள்ள நெருக்கத்தை வங்கதேசம் கைவிட வேண்டும் என்பதுதான் அமெரிக்க அரசின் நோக்கம் என்று ஆசிய அரசியல் விவகார வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
வளர்ச்சி
வங்கதேசம் உருவானதி லிருந்து முதன்முறையாக அதன் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் இருக்கிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் உலகிலேயே 28வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் அதை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அமெரிக்கா முயல்கிறது.