world

img

நியூ கலிடோனியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்    

நியூ கலிடோனியாவில் வியாழக்கிழமை அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  

நியூ கலிடோனியாவில் உள்ள டாடினில் இன்று காலை 6.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நௌமியா தீவில் கடலுக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும், நியூ கலிடோனியாவின் கிழக்கே 407 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த நிலநடுக்கத்தால் பொருள் சேதங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.  

முன்னதாக நியூ கலிடோனியாவில் இன்று அதிகாலை 2 மணியளவில் 7.2 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதாக யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது.