உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 11 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை புதன்கிழமை நிலவரப்படி, 11,00,35,633 கோடியாக அதிகரித்துள்ளது.
அவா்களில் 24,29,811 போ் உயிரிழந்துள்ளனா்.
8,48,51,754 பேர் குணமடைந்துள்ளனா்.
உலகிலேயே அதிக பாதிப்புகளை கொண்ட அமெரிக்காவில் மட்டும் 2,83,81,220 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 4,99,991 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,09,37,320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,55,949 பேர் உயிரிழந்துள்ளனர்