world

img

புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டை நிறுத்தக்கோரி அமெரிக்காவில் பேரணி

நியூயார்க், செப். 18-  அமெரிக்காவில் ஐ.நா பொ துச் சபைக் கூட்டம்  துவங்குவ தற்கு முன்னதாக, காலநிலை மாற்றத்திற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கக் கோரி, நியூ யார்க் நகரில் ஆயிரக்கணக் கான மக்கள் பேரணி நடத்தினர்.சுமார் 700 அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர் குழுக்கள் இப்பேரணியில் பங்கேற்றனர். மனிதகுலத்தின் எதிர்காலம் பெட்ரோல், டீசல், நிலக்கரி உள் ளிட்ட புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதில் தான் அடங்கியுள்ளது என்றும் புதைபடிவ எரிபொருள் கள் மக்களை கொலை செய்கின் றன எனவும் பேரணியில் பங்கேற்றவர்கள் பதாகைகளை ஏந்தி  பேரணி சென்றனர் . பேரணியில்  புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் தற்போதைய திட்டங்களை கைவிட வேண்டும் என்றும் காலநிலை அவசர நிலையை அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.மேலும் இந்தப்  பேரணி,  நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி விவாதங்களை எழுப்பியது.  இந்த பேரணியில்  சுமார் 75,000 பேர்  பங்கேற்றதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கள் தெரிவித்தனர். அணி வகுப்பில் அமெரிக்காவின் முன்னணி நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.

2015 பாரிஸ் உடன் படிக்கையில் நிர்ணயித்த இலக் கிற்கு ஏற்ப புவி வெப்பமடைவதை கட்டுப்படுத்த பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வின் அதிக பட்ச அளவிற்கான வரம்பு வெளி யிடப்பட்டுள்ளது. இதே வேளை யில் அனைத்து நாடுகளும் ஒத்துழைக்கும் போதே இதை அமல்படுத்த முடியும் என்று அறிக்கை கூறியிருந்தது.இந் நிலையில் அடுத்த ஐந்து ஆண்டு களில் உலக வெப்பம் புதிய உச்சத்தை அடையும் என்றும் விஞ் ஞானிகள் எச்சரிக்கின்றனர். 2050 க்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கு அனைத்து வகையிலும் புதை படிவ எரிபொருட்களையும் படிப் படியாகக்  குறைப்பது மட்டுமே வழி. ஆனால் பைடன் தலைமை யிலான அரசு,  புதைபடிவ எரி பொருட்களின் உற்பத்தியை அதி கரித்துக்கொண்டே உள்ளது.இந்தத்  திட்டங்களுக்கு கோடிக்க ணக்கான டாலர்களை வழங்கு கிறார் என்றும் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவதில் உலகை வழி நடத்தும் நாடாக அமெரிக்கா போதுமான அளவு செயல்படவில்லை என்றும் பேரணியில் பங்கேற்றவர்கள் கூறினர். தற்போதைய நிலையில் இருந்து  2050 வரை உலகின் எண்ணெய் மற்றும் இயற்கை எரி வாயுக்களை தோண்டி எடுப்பதில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவினால் மேற்கொள் ளப்படுகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கணக்கிட்டுள்ள னர். கடந்த 100 ஆண்டுகளில் புவியின்  வெப்பத்தை அதிகரிக் கும் வகையில் மற்ற நாடுகளை விட அமெரிக்கா வளிமண்டலத் தில் அதிகளவு கார்பன் டை ஆக் சைடை வைத்துள்ளது எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

;