world

img

வளைகுடா அரசியலில் அதிரடி திருப்பங்கள்

பெய்ஜிங், மார்ச் 15- ஈரான் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் பங்கேற்கும் கூட்டம் ஒன்றை நடத்த சீனா  திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த வாரத்தில் சீனாவின் முயற்சியால் ஈரானுக்கும், சவூதி அரேபியாவிற்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. முதல் கட்டமாக இரு நாடுகளும் தூதரக உறவைப் புதுப்பித்துக் கொண்டு, தூதரக அலுவலகங்களைத் திறக்கப் போகிறார்கள். மேற்கு ஆசியாவில் மிக முக்கிய மான பாத்திரத்தைக் கொண்டுள்ள இந்த இரு நாடுகளின் உறவுகள் மேம்பட்டால் ஒட்டுமொத்த பிராந்தியத்தில் அமைதி உருவாக வாய்ப்புகள் உள்ளன என்று மேற்கு ஆசிய அரசியல் நோக்கர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் மேற்கு ஆசிய அரசியல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. ஈரான் மற்றும்  அதன் ஆறு அரபு அண்டை நாடுகளின் மூத்த அதி காரிகள் பங்கேற்கும் உச்சிமாநாட்டை நடத்த  சீனா முயற்சி எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளி யாகியுள்ளன. அந்த ஆறு அரபு நாடுகளும் வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சிலிலும் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன. நடப்பாண்டின் நிறைவில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இந்த  உச்சிமாநாடு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

இந்த உச்சிமாநாடு நடைபெற்று, ஒரே அறையில் ஈரானும், மற்ற ஆறு அரபு நாடுகளும் அமர்ந்து பேசிவிட்டால் சீனாவுக்கு பெரும் வெற்றி என்று கருதப்படும். கடந்த ஏழு ஆண்டு களாக பெரும் சர்ச்சைகளை தங்களுக்குள் எழுப்பிக் கொண்டிருந்த ஈரானையும், சவூதி அரேபியாவையும் ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட வைத்தது சர்வதேச அளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மற்ற அரபு நாடுகளிடம் இந்த உச்சி மாநாடு குறித்து சீனா மட்டுமல்ல, சவூதி அரேபியாவும் பேச விருக்கிறது. ஆண்டு நிறைவில் நடைபெற விருக்கும் உச்சிமாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதோடு, சர்வதேச அரசியலில் எதிர்பாராத திருப்பங்களையும் உருவாக்கும். மற்றொரு அண்டை நாடான பஹ்ரைனு டனும் சவூதி அரேபியாவுடன் போட்டது போன்ற தொரு உடன்பாட்டை எட்ட முடியும் என்று  ஈரான் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அண்டை  நாடுகளுடனான உறவுகள் புதுப்பிக்கப்படு வதோடு, மேற்கு ஆசியாவில் உள்ள பதற்ற நிலை மைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் மீதான தடைகள் மேலும் உடையும் நிலையும் ஏற்படும். தங்கள்  பேச்சுவார்த்தைகளில் ஏமனில் உள்ள நிலைமை யும் விவாதிக்கப்படும் என்று ஈரான் கூறி யிருக்கிறது.

வாய்ப்புகளாக மாறிய மிரட்டல்கள்

ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் விதித்த  தடைகள் மற்றும் மிரட்டல்கள் அனைத்தும் தங்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்பாக மாறின என்று ஈரானின் ஜனாதிபதி இப்ராகிம் ராய்சி தெரிவித்துள்ளார். பெலாரசின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாசென்கோ ஈரானுக்கு அரசுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரைச் சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே ராய்சி இவ்வாறு தெரி வித்தார். அப்போது பேசிய அவர், “மிரட்டல் களை மீறி நாங்கள் நல்ல முன்னேற்றத்தை அடைந்திருக்கிறோம். எங்கள் அனுபவங்களை நட்பு நாடான பெலாரசிடம் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளோம்” என்றார். அப்போது லுகாசென்கோவும் செய்தி யாளர்களிடம் பேசினார். அவர், “எந்தவொரு தடையும், அழுத்தமும் ஈரானின் முன்னேற்றத்தை தடுக்க இயலவில்லை. இன்று நாங்கள் பல்வேறு ஆவணங்களில் கையெழுத்திட்டிருக்கிறோம். அனைத்து உடன்பாடுகளையும் இரு நாடு களும் நிறைவேற்றினால் இருதரப்பு வர்த்தகம் 10 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உடன டியாக அதிகரிக்கும். சர்வதேச மற்றும் பிராந்திய மட்டங்களிலான பிரச்சனைகளில் இரு நாடு களுக்கும் இடையில் ஒரே மாதிரியான கருத்து கள் உள்ளன. பன்முகத்தன்மை மற்றும் நியாய மான உலக அமைப்பை இரு நாடுகளும் விரும்பு கின்றன” என்று தெரிவித்தார்.