நியூயார்க்,ஒட்டாவா, மார்ச் 15- காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் பாலஸ்தீன மக்களின் நிலங்களை ஆக்கிரமித்த இஸ்ரேல் அரசு, அதனை பல ரியல் எஸ்டேட் கார்ப்பரேட்டுகள் மூலம் கூறு போட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்து வரு கிறது. இதற்காக மிகப்பெரிய ரியல் எஸ்டேட் கண்காட்சிகள் (The Great Real Estate Event) கனடாவிலும், அமெரிக்காவிலும் நடத்தப் பட்டுள்ளன. ரியல் எஸ்டேட் நிறுவனங்களான இமானுவேல் குழுமம், சர்வதேச சந்தைப் படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு (IMP) அமைப்பு மற்றும் யூத ஊடகம் ( JewishPress) ஆகிய வற்றால் நிதியுதவி செய்யப்பட்டு இஸ்ரேலில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனமான “மை ஹோம்” மூலம் இந்த கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கனடாவின் மாண்ட்ரீல், டொராண்டோ நகரங்களிலும், அமெரிக்காவின் டீனெக், நியூ ஜெர்சி, லாரன்ஸ், நியூயார்க் மற்றும் புரூக்ளின் நகரங்களில் அந்த நிறுவனங்களின் பாலஸ்தீ னர்களிடம் திருடிய நிலங்களை காட்சிப் படுத்தியுள்ளன. அதாவது சட்ட விரோதமாகவும், சர்வதேச சட்டங்களுக்கு எதிராகவும் பாலஸ்தீன மக்களை கொலைசெய்தும், துரத்தியும் அவர்க ளின் நிலங்களை இஸ்ரேல் அரசு திருடி பெரும் ரியல் எஸ்டேட் கார்ப்பரேட்கள் மூலமாக அமெ ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள யூதர்களிடம் விற்பனை செய்கிறது. ‘புனித நிலத்தில் உங்க ளுக்கும் ஒரு வீடு’ என இந்த விற்பனையை நடத்தி வருகிறது. மேலும் இங்கிருந்து இஸ்ரேலுக்குச் செல்லா மலேயே அனைத்து விவரங்களையும் பெற்று அந்த நிலங்களை வாங்கிக்கொள்ளலாம் என அபகரித்த நிலங்களுக்கு சலுகையையும் அந் நிறுவனங்கள் கொடுத்துள்ளன. காசா மீது போரை துவங்கிய பிறகு அந் நிலங்களை இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமித்து வருகிறது. அந்த நிலம் முழுவதையும் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருப் போம் என பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறா கவே நடக்கிறது. மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை யில் மேலும் பல இடங்களை ஆக்கிரமித்து வரு கிறது இஸ்ரேல் ராணுவம். இந்தச் சூழலில் தான் அமெரிக்காவிலும், கனடாவிலும் பகிரங்க மாக பாலஸ்தீனர்களின் நிலத்தை இந்நிறுவனங் கள் கூறு போட்டு விற்பனை செய்து கொண்டிருக் கின்றன. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி உட்பட இந்தரியல் எஸ்டேட் நிறுவனங்களின் நில விற்பனை கண்காட்சி நிகழ்வுகள் நடைபெற்ற அத்தனை நகரங்களிலும் பாலஸ்தீன இளைஞர் இயக்கம், சோசலிச மற்றும் விடுதலை கட்சி, பாலஸ்தீனர் இனப்படுகொலையை கண்டித்து வரும் சில யூத அமைப்புகள் உள்ளிட்ட பல பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் இந்த திருட்டு நில விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தியுள்ளன.