world

img

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மையான சொரூபம்.

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

காசா பகுதியில் சிக்கியுள்ள பாலஸ்தீன மக்களுக்கு மனிதநேய உதவிகளை அளிக்கப் போவதாகவும் இதற்காக நூறு மில்லியன் டாலர் நிதியை ஒதுக்குவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி பைடன் சில நாட்களுக்கு முன்பு உறுதி அளித்தார். ஆனால் அதேவேளையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், காசாவில் சிக்கியுள்ள லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கான மனிதநேய உதவிகளை அனுப்ப வேண்டாம்; அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று அதே பைடனின் அமெரிக்கா குறிப்பிட்டது. பாதுகாப்புக் கவுன்சிலில், காசா மக்களுக்கு உடனே உதவிகளை அனுப்ப வேண்டும் என்று 12 நாடுகள் வாக்களித்தன. எதிராக வாக்களித்த ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே.

இதுதான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மையான சொரூபம்.