what-they-told

img

வகுப்புவாத வெறுப்பு பேச்சு; பி.சி.ஜார்ஜ் கைது ஒன்றிய அமைச்சர் வி.முரளீதரன் தலையீடுக்கு டிஒய்எப்ஐ கண்டனம்

திருவனந்தபுரம், மே 1- வெறுப்புணர்வைத் தூண்டும் வகை யில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் யுடிஎப் அரசின் முன்னாள் தலைமைக் கொறடா பி சி ஜார்ஜ் கைது செய்யப்பட்  டார். நீதிமன்றத்தின்முன் ஆஜர்படுத்தப் பட்ட ஜார்ஜுக்கு நிபந்தனையுடன்கூடிய தற்காலிக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அனந்தபுரி இந்து மகா சம்மேளனம் நடத்திய கூட்டத்தில் வெள்ளியன்று (ஏப்.29) பேசிய ஜார்ஜ் கடுமையான வார்த்தை களால் வகுப்புவாத உணர்வைத் தூண்டும் நோக்கத்துடன் பேசியுள்ளார். இதுகுறித்து பல்வேறு தரப்பினர் சனியன்று அளித்த புகா ரின் பேரில் திருவனந்தபுரம் கோட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்தனர்.

அதை தொடர்ந்து ஞாயிறன்று அதிகாலை 5 மணி யளவில் ஈராட்டுப்பேட்டையில் உள்ள வீட்டிற்கு வந்து ஜார்ஜை கைது செய்தனர். டிஜிபி அனில் காந்த் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வெறுப்பு பேச்சை பிசி ஜார்ஜ் வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  மற்றும் வேறுசில இளைஞர் அமைப்பினர் புகார் அளித்திருந்தனர். ஜார்ஜுக்கு ஆதரவாக ஒன்றிய அமைச்  சர்கள் வி முரளீதரன், பாஜக தலைவர் கே  சுரேந்திரன் ஆகியோர் களம் இறங்கினர். பி.சி.ஜார்ஜை வைது செய்து வைத்திருந்த ஏஆர் முகாமுக்குள் நுழைய முயன்ற முரளீதரனை போலீஸார் தடுத்து நிறுத்தி னர். அனுமதி கிடைக்காததால் ஏமாற்றத்து டன் அவர் திரும்பினார். ஜார்ஜ் கைது செய்யப்பட்டதை கண்டித்து மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று கே.சுரேந்திரன் கூறினார். வெறுப்பு பேச்சு நடத்தியதாக கேரள  காவல்துறையால் கைது செய்யப்பட்ட பி.சி.ஜார்ஜுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஒன்றிய அமைச்சர் வி.முரளீதரனின் செயல் பதவி ஏற்பு உறுதிமொழியை மீறிய செயல் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்க  அகில இந்திய தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஏ.ஏ.ரஹீம் கூறினார்.

வெறுக்கத்தக்க வகையில் வகுப்புவாதம் பேசியதாக கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்ட பி.சி.ஜார்ஜை நேர டியாக ஆதரித்தும், ஒன்றிய அமைச்சராக இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தியும், சட்டத்தை மதிக்கும் காவல்துறைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு முயன்ற வி.முரளீ தரனின் செயல் அதிகார துஷ்பிரயோகம் என ரஹீம் தெரிவித்துள்ளார். பி.சி.ஜார்ஜூக்கு ஆதரவாக பாஜக வினர் களமிறங்கியுள்ள நிலையில் அழு கிய முட்டை வீசியும் கருப்புக்கொடி காட்டி யும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் ஜார்ஜுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

;