காஞ்சிபுரம், மே 20- காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் பகுதியைச் சார்ந்த அஜித் என்கின்ற வாலிபருக்கும் அவரது நண்பர்க ளுக்கும் இடையே கஞ்சா மற்றும் குடி போதையின் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கொ ருவர் மோதிக் கொண்டதில் அஜித் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன் மற்றும் காக்கா சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் சில நாட்களுக்கு முன்பு கைலாசநாதர் கோவில் தெரு அருகே காய்கறி வியாபாரிகளுக்கு இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. அதில், ரஜினி என்கிற வியாபாரி அடித்து கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.