what-they-told

img

இரு மாத கணக்கெடுப்பு: மின்வாரியத்தில் கட்டணக் கொள்ளை - எஸ்.எஸ்.சுப்பிரமணியம்

கொரோனா வைரஸ் தாக்குதலிருந்து தற்காத்து கொள்ள அரசு சொல்லும் ஓரே வழி ஊரடங்கு, மக்கள் வீட்டில் முடங்கி கிடக்கும் போது தண்ணீர், மின்சாரம், பால் போன்ற பொருள்கள் சற்று கூடுதலாக தேவைப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும், இதே காலத்தில் ஊரடங்கால் லே ஆப், லாக்அவுட், வேலை இழப்பு, வருமான இழப்பு;  இதனால் அன்றாட வாழ்க்கையையே நடத்த முடியாத நிலையில் மக்கள் பரிதவிப்பு. இந்த சூழலில் மின்வாரியம் போன்ற சேவைத் துறை நிறுவனங்கள் மின் கட்டணம் செலுத்துவது போன்றவற்றில் கால அவகாசம் கட்டண சலுகை அளிப்பதற்கு பதிலாக அபரி மிதமான மின்கட்டண வசூல் திட்டத்தை அமல்படுத்தி மக்களது பணத்தைக் கொள்ளை அடிக்கும் நிகழ்வு நடந்து கொண்டுள்ளது.

தொலைத் தொடர்பு போன்ற அனைத்துத் துறைகளிலும் மாதா மாதம் மக்களின் நுகர்வை கணக்கிட்டு அதற்கான கட்ட ணத்தை வசூலித்து வருகின்றார்கள். ஆனால் மின்துறையில் மட்டும் இரண்டு மாத கணக்கெடுப்பு, மின்நுகர்வோர்களின் மின் நுகர்வு அளவுக்கு ஏற்ப்ப கூடுதல் கட்டண நிர்ணயிப்பு ( slab  system ) என்ற பெயரால்  நுகர்வோர்களுக்கு கூடுதல் சுமையை சுமத்துகிறார்கள். உதாரணமாக இப்போது உள்ள இரு மாத கணக்கீட்டின் அடிப்படையில் 1000 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தும் ஒரு மின் நுகர்வோர் மின் கட்டணமாக ரூ 5420 செலுத்த வேண்டி உள்ளது. இதே மின் நுகர்வோர் மாத மாத மின் கட்டண அளவீடு  முறை இருக்குமானால் முதல் மாதத்தில் 500 யூனிட் அள வுக்கு மின்சார   கட்டணமாக ரூ. 1330 யையும் அடுத்த மாதத்தில்  மீதம் உள்ள 500 யூனிட்டுக்கு கட்டணமாக ரூ.1330 யை கட்ட ணமாகவும் செலுத்தவார். ஆக மாத மாத கணக்கீட்டின் அடிப்ப டையில் 1000 யூனிட்டை பயன்படுத்தும் ஓரு மின் நுகர்வோர் ரூ. 2660 செலுத்ததினாலே போதும். ஆனால் இரு மாத கணக் கீட்டின் அடிப்படையில் அதே மின் நுகர்வோரிடம் ரூ. 5420யை வசூலித்து ரூ. 2760 யை கூடுதலாக கட்டண கொள்ளையை அரங்கேற்றி வருகின்றது அரசு.

அதுமட்டுமல்லாமல் இரு மாத கணக்கெடுப்போடு மின் பயன்பாட்டு கூடுதல் அளவுக்கு ஏற்ப யூனிட்டுக்கு நிர்ண யிக்கும் தொகையை கூடுதலாக்கும் ( slab system) அடுக்கு கட்டண முறையை அமலாக்கி மின் நுகர்வோர்க்கு கூடுதல் சுமையை திணிக்கின்றனர். அதாவது  500 யூனிட் மின்சா ரத்தை நுகர்ந்தால்ரூ.1330 யை செலுத்தும் அதே மின்நுகர் வோர் 501 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தினால் ரூ.2127 யை செலுத்தி ரூ. 797 கூடுதலாக செலுத்தும் நிலைக்கு தான் ‘விஞ்ஞானப் பூர்வமான’ கட்டண நிர்ணயிப்பு என்று கூறி, மின்நுகர்வேர்களை ஏமாற்றி கட்டணக் கொள்ளையை தமிழக அரசும் மின்வாரியமும் அரங்கேற்றி வருகின்றன

இந்த கட்டணக் கொள்ளை என்பது இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாக நடைபெற்று வரும். மின் நுகர்வோர்களே நாம் எப்படி ஏமாற்ற பெற்று வருகிறது. இன்று நாடு முழுவதும் பேயாட்டம் போடும் நோய்த் தொற்றி னால் எதிர்த்துப் போராடுவதைப் போல தமிழக அரசின் மின்வா ரியத்தின் கட்டண கொள்ளைக்கு எதிராக கிளர்ந்தெழுவோம். இரண்டு மாத கணக்கெடுப்பு முறையை தகர்த்தெறிவோம். மாத மாத கட்டண முறையை அமல்படுத்தச் செய்வோம். நியாய மான மின் கட்டணத்தை தடையின்றி செலுத்துவோம். நிதி நிலையை பெருக்கி மின் துறையை பொதுத் துறையாக பாதுகாப்போம்!

கட்டுரையாளர் : முன்னாள் தலைவர், 
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)