what-they-told

img

காவல் துறையை நெறிப்படுத்துக!

சென்னை, நவ.24-  கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரை அராஜகமான முறையில் கைது செய்த காவல்துறைக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்ட னம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக்,மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு டிஜிபி அலு வலகம் முன்பு போராட்டம் நடத்திய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்களை போராட்ட இடத்திற்கு வர விடாமல் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டிக்கிறது. தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் தமிழகத்தில் நடந்துள் ளன. மரணம் குறித்த மர்மம் இன்னும் விலகாத நிலையில் மரணத்திற்கு நீதி கேட்டு நவம்பர் 24  அன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சென்னை யில் உள்ள தமிழக டிஜிபி அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்திட அறிவித்தது.

தமிழகம் முழுவதும் இந்த போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்ட பெண்கள் காவல்துறையினரால் மிரட்டப்பட்டுள்ளனர். மாதர் சங்க தலைவர்கள் கைது மற்றும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள ஒன்றுகூடும் உரிமை, உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமையை மறுக்கிற சட்ட விரோத செயல் என்பதை காவல்துறைக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது. பெண்கள் ஒன்றுகூடி ஒரு கோரிக்கையை எழுப்பிட உரிமை உண்டு. இதை தமிழக காவல்துறை தலைவர் அலுவலகம் முன்பே மறுக்கும் நிலை இருந்தால், தமிழகம் முழுவதும் உள்ள கீழ்மட்ட காவல் அதிகாரிகள் ஜனநாயக மாக நடந்துகொள்வார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. தமிழக முதல்வர் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு காவல்துறை யை நெறிப்படுத்த வேண்டும். காவல் துறையின் அடக்குமுறையை தகர்த்து முன்னேறிய மாதர் சங்க தோழர்களை கண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நெகிழ்ச்சி அடைகிறது. அடக்குமுறையை எதிர்கொள்ளும் மாதர் சங்கத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் துணை நிற்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;