புதுதில்லி, செப். 9 - இந்தியாவில் அசைவ உணவு விலையைக் காட்டிலும், சைவ உண வுக்கான செலவு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. ‘கிரிசில் மார்க்கெட் இன்ட லிஜென்ஸ் மற்றும் அனலிட்டிக்ஸ்’ நிறு வனத்தின் மாத இதழான ‘ரோட்டி ரைஸ் ரேட்’ (Roti Rice Rate) அறிக் கையில் இதனை தெரிவித்துள்ளது. “ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது, ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சைவ சாப்பாட்டின் விலை மாதாந்திர அடிப்படையில் சிறிதளவு குறைந் துள்ளது, ஆனால் வருடாந்திர அடிப்ப டையில் இரண்டாவது முறையாக தொடர்ந்து உயர்த்துள்ளது. அதாவது, சைவ சாப்பாடு விலையில் 24 சத விகிதம் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் கிலோ ஒன்று க்கு 37 ரூபாயாக இருந்த தக்காளி விலை 102 ரூபாயாக அதிகரித்தது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு ஆகியவையே சைவ உணவு விலை அதிகரிக்கக் காரணமாக இருந்துள் ளது. குறிப்பாக வீட்டு உபயோக சிலிண் டர்கள் விலை குறையாததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஹோட்டல் உரிமையாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். சைவ உணவுக்கான செலவின அதி கரிப்பில், 21 சதவிகிதம் அளவிற்கு தக்காளியின் விலை உயர்வு மட்டுமே காரணமாக அமைந்துள்ளது; வரு டாந்திர அடிப்படையில் தக்காளி விலை 176 சதவிகிதம் உயர்ந்துள்ளது; வெங்கா யத்தின் விலை 8 சதவிகிதம், மிளகாய் விலை 20 சதவிகிதம் மற்றும் சீரகம் விலை 158 சதவிகிதம் என செலவு அதி கரித்துள்ளது” என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சைவ உணவுக்கான செல வானது, அசைவ உணவுக்கான செல வைக் காட்டிலும் அதிகமாக இருந்துள் ளது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அசைவ உணவுக்கான செலவினத்தில் 50 சதவிகிதத்தை கோழி இறைச்சிப் பெறுகிறது. ஆனால், பிராய்லர் கோழியின் விலை குறைந்துள்ளதால், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 3 சதவிகிதம்தான் விலை அதிகரித்துள்ளது. எனவே, அசைவ சாப்பாட்டு விலை குறைவாக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
தேசியக்கொடி பற்றி எங்களிடம் மக்கள் கேள்வி கேட்கக் கூடாது!
சுதந்திரம் பெற்றதில் இருந்து 2002-ஆம் ஆண்டு வரை, நாக்பூரின் மஹால் பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் தலை மையகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதில்லை என கூறப்படுகிறதே.. என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திடம் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. இதற்கு பதிலளித்திருக்கும் மோகன் பகவத், “ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆகிய தேதிகளில் நாங்கள் எங்கிருந்தாலும் தேசியக் கொடியை ஏற்றுவோம். நாக்பூரில் உள்ள மஹால் மற்றும் ரெஷிம்பாக் ஆகிய இரு வளாகங்களிலும் கொடியேற்றப்பட்டு உள்ளது. இந்தக் கேள்வியை மக்கள் எங்களிடம் கேட்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.