what-they-told

img

இந்தியா, ஆசியா சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற உதகை எம்.என் சாக்கோ அருங்காட்சியகம்

உதகை, டிச.24- 200 கிலோ எடையில் டார்க் சாக் லேட்டை உருவாக்கி, காட்சிப்படுத் திய உதகை என்.என் சாக்கோ அருங்காட்சியத்திற்கு இந்தியா, ஆசிய சாதனை விருது வழங்கப் பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் பிறந்து 200 ஆண்டுகள் நிறைவடைவதையும், முன்னிட்டும் என்பிஎஸ் நிறுவனங் களின் 80 ஆவது ஆண்டை கொண் டாடும் வகையில், எம்.என் சாக் லேட் நிறுவனத்தின் 12 ஆவது ஆண்டு சாக்லேட் திருவிழா உதகை  ஒய்டபிள்யூசிஏ-வில் அமைந்துள்ள  எம்.என்.சாக்கோ ஸ்டோரி அருங் காட்சியகத்தில் நடைபெற்றது. இதனை என்பிஎஸ் குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான், பசலூர்  ரகுமான் ஆகியோரால் நடத்தப் பட்டது. இதில் முக்கிய அம்சமாக ஆசிய புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் இந்திய புக் ஆப் ரெக்கார்ட் ஆகிய விருதுக்காக 187 வகை யான டார்க் சாக்லேட்களை காட்சிப் படுத்தியிருந்தனர். இந்நிகழ்வில், ரெக்கார்ட் நிறுவனங்களின் அஜிடி கேட் (ஜட்ஜ்) விவேக் கலந்து கொண்டு, அங்கு காட்சிக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப் பட்டிருந்த டார்க் சாக்லேட்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இதன்பின் எம்.என் சாக்கோ ஸ்டோரி அருங்காட்சியகத்திற்கு இந்தியா மற்றும் ஆசிய சாதனை  புத்தகத்தில் இடம் பெறுவதற் கான விருதினை வழங்கி கௌர வித்தார்.

இதுகுறித்து எம்.என்.சாக் கோ அருங்காட்சியகத்தின் உரிமையாளர்களான என்பிஎஸ் குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் ரகு மான், பசலூர் ரகுமான் சகோ தரர்கள் கூறுகையில், 80 ஆண்டு களுக்கு முன் என்பிஎஸ் என்ற நிறுவ னத்தை எங்களது தத்தா உரு வாக்கி திறம்பட நடத்தி வந்தார். அதிலிருந்து எம்.என்.சாக்கோ என்ற நிறுவனத்தை நாங்கள் கடந்த  2000 ஆம் ஆண்டில் துவங்கி, ஒவ் வொரு ஆண்டும் சாக்லேட் திரு விழாவை நடத்தி சக்லேட்டின் நன்மைகள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற் படுத்தி வருகிறோம். “இந்தியாவு டனான பயணம் எம்.என்” என்ற  அருங்காட்சியகத்தை 2013 ஆம்  ஆண்டு துவங்கி  டார்க் சாக் லேட்டின் ஆரோக்கியம், நன்மை கள் பற்றிய விழிப்புணர்வை பரப்பும் நோக்கில் உருவாக்கி னோம். இந்தாண்டு 12 ஆவது ஆண்டு சாக்லேட் திருவிழாவை நடத்துகிறோம். இந்த விழாவில் நீலகிரி மாவட்டம் பிறந்து 200 ஆவது ஆண்டை கொண்டாடும் வகை யில், “ஊட்டி 200” என்பதின் பெரு மையை சாக்லேட் முறையில் வெளிப்படுத்தும் வகையில், 200  கிலோ எடைகொண்ட ராட்சத  டார்க் சாக்லேட்டை உருவாக்கி யுள்ளோம். மேலும், 187 வகையான டார்க் சாக்லேட்களை உருவாக்கி காட்சிப்படுத்தியுள்ளோம். அதற்கு இந்தியா மற்றும் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்று அதற் கான விருதினை பெற்றது மிகவும்  மகிழ்ச்சியாக உள்ளது என்ற னர். இந்த சாக்கோ ஸ்டோரி அருங் காட்சியகத்தில் கிலோ ரூ.500  முதல் ரூ.8,000 வரையிலான  விற்பனைக்கு வைக்கப்பட் டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.